ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்திய பாகிஸ்தான்

நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை.
ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்திய பாகிஸ்தான்
Published on: 

நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ஃபதா-2 (Fatah-2 ER) ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாகச் சோதித்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

அதிநவீனம தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணை

இந்த ஏவுகணை மேம்பட்ட வழிகாட்டுதல் தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன ஏவியோனிக்ஸ் (விமான மின்னணுவியல்) வசதிகளைக் கொண்டுள்ளது.

இதன் தனித்துவமான பறக்கும் பாதை மற்றும் திசைமாறிச் செல்லும் திறன் காரணமாக, இது இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்குவதோடு, எதிரியின் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளையும் முறியடிக்கும் திறன் கொண்டது என்று பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நீட்டிக்கப்பட்ட தூரம் கொண்ட இந்த ஃபதா-2 ER ஏவுகணையானது, ராணுவத்தின் தாக்குதல் வரம்பையும், தொலைதூர இலக்குகளைத் தாக்கும் திறனையும் மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அதிபர், பிரதமர் வாழ்த்து

இந்த சோதனையை ராணுவ ராக்கெட் படைப்பிரிவின் தளபதி, பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

வெற்றிகரமான சோதனைக்காக, அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைவருமான ஆசிம் முனீர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் ஆகியோர் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Fatah-4 குரூஸ் ஏவுகணை

கடந்த வாரம், தரையிலிருந்து ஏவப்படும் Fatah-4 குரூஸ் ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட வகையை பாகிஸ்தான் சோதித்திருந்தது. முன்னதாக மே மாதத்தில், தரையிலிருந்து ஏவப்படும் Fatah-IV குரூஸ் ஏவுகணையின் சோதனையையும் பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தியிருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com