முகமது அலி ஜின்னா பற்றிய ரகசியத்தை பாதுகாத்த மும்பை மருத்துவர்கள் 2 பேருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது அறிவிப்பு

நேரு அல்லது மகாத்மா காந்தி ஆகியோருக்கு தெரிந்திருந்தால், விடுதலை மற்றும் பிரிவினைக்கான அரசியல் கணக்கீடுகளே மாறியிருக்கக்கூடும்
ஜின்னா
ஜின்னா
Published on

1947 பிரிவினைக்கு முன்னர் முஸ்லீம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னாவுக்கு இருந்த நோயை வைத்திருந்ததற்காக மும்பையை சேர்ந்த இரு மருத்துவர்களுக்குப் பாகிஸ்தானின் உயரிய குடிமகன் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததோடு பிரிவினையும் ஏற்பட்டு இந்தியா - பாகிஸ்தான் என பிரிந்தது. பாகிஸ்தான் உருவாக்கத்திற்கு மூல கர்த்தா முகமது அலி ஜின்னா ஆவார். அவரே பாகிஸ்தானின் நிறுவனராக அறியப்படுகிறார்.

ரகசியம்

1946இல் ஜின்னாவின் எக்ஸ்ரேயைப் பரிசோதித்து அவருக்கு நுரையீரல் காசநோய் முற்றிய நிலையில் இருப்பதாகவும், அவர் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருக்கக்கூடும் என்றும் இரு மருத்துவர்கள் கணித்திருந்தனர்.

மும்பையை சேர்ந்த மருத்துவர் ஜல் ரத்தன்ஜி படேல் மற்றும் எக்ஸ்ரே நிபுணர் டாக்டர் ஜல் தைபோ ஆகியோரே அவ்விருவர் ஆவர்.

இந்த இரு மருத்துவர்களும் ஜின்னாவின் மருத்துவ அறிக்கையை ரகசியமாக வைத்திருந்தனர்.

முக்கியத்துவம்

லேரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லேபியர் எழுதிய Freedom at Midnight புத்தகத்தில், "ஜின்னாவின் நோய் குறித்த தகவல் லார்ட் மவுண்ட்பேட்டன், ஜவஹர்லால் நேரு அல்லது மகாத்மா காந்தி ஆகியோருக்கு தெரிந்திருந்தால், விடுதலை மற்றும் பிரிவினைக்கான அரசியல் கணக்கீடுகளே மாறியிருக்கக்கூடும்" எனகுறிப்பிடப்பட்டுள்ளது.

விருது

இந்நிலையில் மறைந்த இந்த மருத்துவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாட்டின் உயரிய விருதான நிஷான் இ இம்தியாஸ் விருது வழங்கப்படும் எனப் பாகிஸ்தான் அமைச்சரும், நாட்டின் விருதுகள் குழுவின் தலைவருமான அஹ்சன் இக்பால் தெரிவித்துள்ளார்.

ஜின்னாவின் நோய்

1930களில் இருந்தே ஜிண்ணா காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் இந்த நோய்யை குணப்படுத்த ஆன்டிபயாடிக் எதுவுமில்லை.

தனது அரசியல் வாழ்வின் இறுதிப் பகுதியில் கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் பிறந்த ஓராண்டிற்குப் பிறகு, 1948 செப்டம்பர் 11 அன்று நுரையீரல் காசநோய் காரணமாக அவர் காலமானார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com