

பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த ஆண்டு மே 7-ம் தேதி அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்டன. மே 9 அன்று பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட்டது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
பாகிஸ்தானும் தங்கள் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது.
அதன்படி, இந்திய விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்தும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளித் தடையை அக்டோபர் 24-ம் தேதி வரை நீட்டித்து பாகிஸ்தான் உத்தரவிட்டது.