

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்கியது.
அதன்பின் இருதரப்புக்கும் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்ததால் இழுபறி நீடித்து வருகிறது.
இதற்கிடையே அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு பிறகு ஈரான் மீது மீண்டும் தாக்குதல் தொடங்க அமெரிக்கா முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் ஈரான் மீது மிகவும் சக்திவாய்ந்த குண்டை வீச அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக சி.என்.என் ஊடகம் வெளியிட்ட செய்தியில் கூறி இருப்பதாவது:-
ஈரானுக்கு எதிராக தனது மிகப்பெரிய அணு ஆயுதம் அல்லாத குண்டைப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
அனைத்து குண்டுகளின் தாய் என அழைக்கப்படும் ஜி.பி.யு-43-பி மாபெரும் வான்வழித் தாக்குதல் குண்டை, ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது வீசுவது குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஆராய்ந்து வருகிறது என்று தெரிவித்து உள்ளது.
இந்த வெடிகுண்டு ஒரு பரந்த பகுதியை அழிக்கும் திறன் கொண்டது ஆகும்.