

நாட் டேட்டிங் செயலியில் பீரியம் கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்துள்ள ஆண் ஒருவர், அவருக்கு பொருத்தமான பெண் பச்சை குத்தியிருந்த காரணத்தினால் நிராகரித்திருக்கிறார். இந்த சம்பவத்தை அதன் நிறுவனர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்ததை அடுத்து அது தற்போது விவாத்தை கிளப்பியுள்ளது.
நாட் டேட்டிங் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜஸ்வீர் சிங் இந்த சம்பவம் குறித்து அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு திருமணத் தளத்தை நிர்வகிப்பது என்பது, உயரம், சம்பளம், நிறம், கல்வி மற்றும் தொழில் தொடர்பான விருப்பத்தேர்வுகள் உட்பட பயனர்களின் தேவைகளை கேட்டறிந்து அதற்கேற்றாற்போல் வடிவமைப்பதாகும்.
இது எல்லாம் மிகவும் பொதுவானவை ஆனால் சமீபத்திய இந்த பயனரின் கோரிக்கை என்னை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியிருப்பதாக தெரிவித்துள்ளார்
வரன் பார்க்கும் செயல்முறையில் இது போன்ற ஒரு விருப்பத்தை எவ்வாறு சேர்க்க முடியும் என்று இந்த சம்பவம் தன்னை யோசிக்க வைத்தாக நிறுவனர் ஜஸ்வீர் சிங் தெரிவித்துள்ளார். மேலும் செயலியின் வடிவமைப்பில் நீங்கள் பச்சை குத்தியவரா அல்லது இல்லையா போன்றவற்றை எவ்வாறு சேர்க்க முடியும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். ஒரு துணை தேடுபவர்களிடமிருந்து பலவிதமான தேவைகளை இதுவரை கேட்டிருக்கிறேன் ஆனால் இந்த குறிப்பிட்ட தேவை தனக்கு புதிதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் விவாதத்தை தூண்டியுள்ளது. அதில் சிலர் இவ்வறான விருப்பத்தேர்வுகளை செயலியில் சேர்ப்பதற்கு பதிலாக இருவரும் நேரடியாக உரையாடலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் இது புதிதான நிபந்தனை ஒன்றும் இல்லை என்றும் சில நிறுவனங்கள் கூட பச்சை குத்திய ஆட்களை வேலைக்கு எடுப்பதில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்