ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கையால் ஈரானுக்கு வருவாய் இல்லை - அதிபர் டிரம்ப்!

ஒப்பந்தம் தேவை என்ற ஈரான் விருப்பத்தை நிராகரித்து ஜலசந்தி கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தினார் - டிரம்ப்
Hormuz
Published on: 
Summary

அமெரிக்கா-ஈரான் இடையே மத்திய கிழக்கு போரில் தற்போது தாக்குதல் நடக்கவில்லையென்றாலும் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இருதரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் சமீபத்தில் பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்க ஈரான் விதித்த 7 நிபந்தனைகளை அமெரிக்கா நிராகரித்தது.

இதற்கிடையே 7 நாட்களுக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான போர் நிறுத்த முன்மொழிவை ஈரான் அமெரிக்காவிடம் கத்தார் நாட்டு மத்தியஸ்தர்கள் மூலம் தெரிவித்தது. ஆனால் அதை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்தார்.

மேலும் அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடக்கும் இடைக்காலத் தேர்தல்களுக்குப் பிறகு ஈரான் மீதான மீண்டும் தாக்குதல் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.

டிரம்ப் எச்சரிக்கை

இந்த நிலையில் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஹோர்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க ஈரான் விரும்புகிறது. ஏனென்றால் அவர்கள் அழிவின் விளிம்பில் உள்ளனர். ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையால் அந்நாட்டிற்கு வருவாய் எதுவும் கிடைக்க வில்லை. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே அவர்களுக்கு வருவாய் கிடைக்கிறது.

தற்போது அவர்கள் தங்களுக்குத் தாங்களே வினையைத் தேடிக்கொண்டார்கள்.

ஈரான் தவிப்பு

அந்த ஜலசந்தியை மூடிவிட்டு உலகிற்குச் சிக்கலை உருவாக்குவோம் என்று நினைத்தார்கள். அதற்கு நான், உங்களுக்கு எதிராக அந்த ஜலசந்தியை மூடிவிடுவோம் என்றும் ஆனால் மற்ற அனைவரும் அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் கூறினேன்.

நான் ராணுவ வரலாற்றிலேயே மிகக் கடுமையான முற்றுகையை அமல்படுத்தினேன். அது ஒரு எக்கு சுவர் போன்றது. இதனால் வருவாய் குறைந்து தற்போது ஈரானிடம் பணம் இல்லை.

அமெரிக்கா மிரட்டல்

ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் விரும்புகிறது. அதைத்தான் நானும் அதைத்தான் விரும்புகிறேன். ஆனால் அவர்களின் நிபந்தனைகளை ஏற்க முடியாது.

ஹார்முஸ் ஜலசந்தி முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. ஈரானியர்கள் பலியாகிக் கொண்டிருப்பதால் அந்த ஜலசந்தியை திறக்க அவர்களும் விரும்புகின்றனர் என்று டிரம்ப் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com