சீனா - வடகொரியா இடையே புதிய பாலம் திறப்பு

பாலத்தின் மீது சீனா மற்றும் வடகொரியாவின் தேசியக் கொடிகள் பொருத்தப்பட்ட லாரிகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன.
Bridge between china- Northkorea
Published on: 
Summary

சீனாவின் வடகிழக்கு நகரமான டான்டாங்கையும், வடகொரியாவின் சினுயியு நகரத்தையும் இணைக்கும் புதிய பாலம் திறக்கப்பட்டு உள்ளது.

இந்த பாலம் 4 வழிப்பாதை கொண்ட, 3 கிலோமீட்டர் நீளமுள்ளதாகும். யாலு நதி பாலம் என்று பெயரிடப்பட்ட இந்த பாலத்தின் திறப்பு விழாவில் இரு நாட்டு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அப்போது பாலத்தின் மீது சீனா மற்றும் வடகொரியாவின் தேசியக் கொடிகள் பொருத்தப்பட்ட லாரிகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன.

இந்த விழாவில் காணொளி வாயிலாக உரையாற்றிய சீன பிரதமர் லி கியாங் கூறுகையில்," சீனா-வடகொரியா இடையிலான உறவு ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்து ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது" என்றார்.

இந்த பாலம் 2014-ம் ஆண்டிலேயே பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது சீனப் பகுதியில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்திருந்தன.

ஆனால் வடகொரியப் பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்–படவில்லை. தற்போது 12 ஆண்டுகள் தாமதத்திற்கு பாலம் திறக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com