

நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ரசுவா மாவட்டத்தில் கோஷி நதியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி இதுவரை 626 பேர் பலியாகியுள்ளனர். 2500க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
நேபாள ராணுவத்துடன் இணைந்து மீட்பு பணிகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. முதலில் வெளிநாட்டு மீட்பு குழுக்களின் உதவியை மறுத்த நேபாள் தற்போது உதவியை ஏற்பதாக அறிவித்துள்ளது.
இதனிடையே மீட்பு பணிகள் தொடர்பாக வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். இருந்தபோதும் பலர் உயிருடன் மீட்கப்படுவது மக்களையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் நேபாள வெள்ளத்தில் சிக்கிய இரட்டை குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட குழநதைகளை நேபாள ராணுவப் பெண் வீராங்கனைகள் தங்கள் கையில் ஏந்தியுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எங்கும் மரண ஓலம் ஒலிக்கும் நம்பிக்கையற்ற சூழலுக்கு மத்தியில் இந்த நிகழ்வு அழிவில் இருந்து மீளும் நம்பிக்கையை வழங்கி இருக்கிறது.
மேலும் தங்கள் உயிரை பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபடும் வீரர் வீராங்கனைகளின் துணிச்சலையும் பறைசாற்றும் வண்ணம் அமைந்துள்ளது.
நேபாள ராணுவம் ரசுவா மாவட்டத்தில் இதுவரை 883 பேரைக் காப்பற்றியுள்ளது.
இதில் மேல் திரிசூலி நீர்மின் திட்டத் சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த 350 தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளும் அடங்குவர்.
வெள்ளபெருக்கில் வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் மின் உள்கட்டமைப்புகளை அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பள்ளத்தாக்கு கிராமங்கள் உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு உதவி சென்று சேருவதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.
இதனிடையே சீனா - திபெத் எல்லையில் மேலும் ஒரு புதிய செயற்கை ஏரி உருவாகி உள்ளதும் அதனை தடுத்து நிறுத்தியிருக்கும் பனிப்பாறைகள் உடைந்து நீர் வேகமாக கீழ்நோக்கி வரும் ஆபத்து என்பதால் நேபாளத்தில் மீண்டும் வெள்ளைப்பருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.