ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் இயங்கும் நவீன டிரோன்: உக்ரைனுக்கு எதிரான போரில் பாடம் கற்றுக்கொண்ட வடகொரியா

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவிற்கு ஆதரவாக கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் வடகொரியா போரில் ஈடுபட்டு வருகிறது.
Kim Jong Un plans AI-powered drones
Published on: 
Summary

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் இயங்கும் டிரோன்களை தயாரித்து, அவற்றின் மூலம் வருங்காலத்தில் எதிரி நாடுகளுடன் போர் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

உக்ரைன் போரில் வடகொரியா

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவிற்கு ஆதரவாக கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் வடகொரியா போரில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் வடகொரியா இந்த போரில், 16,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை அனுப்பி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் இரு சக்திவாய்ந்த நாடுகள் இணைந்து சண்டையிட்டும், உக்ரைன் ராணுவத்தை அதனால் சுலபமாக வீழ்த்த முடியாத சூழல் நிலவுகிறது.

இந்த போரில் ரஷியா மற்றும் வடகொரியா மீது ஆளில்லா டிரோன்களை பயன்படுத்தி உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரில் கிடைத்த அனுபவத்தின் மூலம், ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் இயங்கும் டிரோன் தயாரிப்புகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்கொரிய பேராசிரியர்

வடகொரியா ஆளில்லா விமானங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் தனது ராணுவத்தை மாற்றியமைத்து வருவதாக தென்கொரியாவின் கியுங்னம் பல்கலைக்கழக பேராசிரியர் லிம் யூல் சுல் தெரிவித்துள்ளார்.

இந்த ஆயுத தயாரிப்பு நடவடிக்கையின் மூலம், தென் கொரியாவை அச்சுறுத்த வட கொரியா முயற்சித்து வருவதாகவும் லிம் கூறினார்.

ஏ.ஐ டிரோன் தயாரிப்பு

இந்த நிலையில் இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், நவம்பர் 2024 இல் தற்கொலை தாக்குதல் டிரோன்களை பெருமளவில் உற்பத்தி செய்ய கிம் உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும் மார்ச் 2025 இல் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட பதிப்புகளை கிம் மேற்பார்வையிட்டதாகவும், செப்டம்பர் 2025 இல் ஆயுதங்களை நவீனமயமாக்குவதில் செயற்கை நுண்ணறிவுக்கு முன்னுரிமை அளிக்குமாறு கிம் அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்துள்ளது.

X