AI வழங்கிய தேதியில் தாயை அடக்கம் செய்த நபர் - குடும்பத்தில் நிகழ்ந்த துரதிர்ஷ்டம்

சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள ஒரு குடும்பத்தில் கடைசி ஐந்தாவது மகனாக ஷி என்பவர் பிறந்துள்ளார்.
AI Funeral Date Dispute
Published on
Summary

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது தாயின் இறுதி சடங்கிற்கு நாள் குறித்து தரும்படி ஏ.ஐ செயலியை அணுகினார். இதையடுத்து ஏ.ஐ செயலி வழங்கிய தேதியை அந்த நபர் பின்பற்றியபோது, அவரது குடும்பத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டமான நிகழ்வை அடுத்து, ஏஐ செயலி குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள ஒரு குடும்பத்தில் கடைசி ஐந்தாவது மகனாக ஷி என்பவர் பிறந்துள்ளார். அவர் தனது தாயார் இறந்து போனதை அடுத்து, தனது தாயை மங்களகரமான தேதியில் அடக்கம் செய்ய விரும்பியுள்ளார்.

அப்போது ஷி-யின் குடும்பத்தினர், நாள் குறித்து தரும்படி முதலில் பெங் சுய் என்ற நிபுணரை அணுகினர். அப்போது அவர் ஏப்ரல் 20 என்ற தேதியை பரிந்துரை செய்துள்ளார்.

இதையடுத்து அவரது தாயார் இறந்த நான்காவது நாளில் அந்த தேதி வருவதால், உள்ளூர் சம்பிரதாயத்தின்படி இரட்டை இலக்க நாட்கள் இறுதி சடங்குகளுக்கு துரதிர்ஷ்டவையாக பார்க்கப்படுகின்றன.

இதன்காரணமாக அவர் ஒரு ஏ.ஐ செயலியின் உதவியை நாடினார். அந்த செயலி ஏப்ரல் 19-ஆம் தேதியை பரிந்துரை செய்துள்ளது. மேலும் அந்த செயலி இறுதி ஊர்வலத்திற்கு முன்பு சம்பிரதாய முறைப்படி காகித குதிரைகளையும், காகித பணத்தையும் எரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்தப் பாரம்பரிய வழக்கம், இறந்தவர்களுக்கு மறுவுலகப் பயணத்திற்குத் தேவையானவற்றை வழங்கும் என்று நம்பப்படுகிறது.

இருப்பினும், அந்த செயலியின் ஆலோசனையில் உள்ள முரண்பாடுகளை ஷி பின்னர் கவனித்துள்ளார். அது காலை 7 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் அடக்கம் செய்யப் பரிந்துரைத்த அதே வேளையில், ஏப்ரல் 19 ஒரு மங்களகரமான தேதி அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தது.

அதற்குள், ஷி இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் குறித்து உறவினர்களிடம் தெரிவித்திருந்ததால், தேதியை மாற்றுவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டதை உணர்ந்தார்.

இதையடுத்து இறுதிச் சடங்கு முடிந்த சிறிது நேரத்திலேயே, அவருடைய உறவினர்களில் ஒருவர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து தாயின் இறுதி சடங்கிற்காக செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தி தவறான தகவல்களை பெற்றதாக ஷி தனது குடும்பத்திடம் கூறினார்.

இறுதியில் அவர், அந்த மென்பொருளை உருவாக்கிய நிறுவனத்தின் மீது, மன்னிப்பு மற்றும் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து ஏ.ஐ செயலி நீதிமன்றத்தில் வாதாடுகையில், நிறுவனத்தின் சேவை விதிமுறைகளின்படி, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட தகவல்கள் குறிப்புக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன எனவும் அவற்றை தொழில்முறை ஆலோசனையாகக் கருதக்கூடாது என்றும் கூறியது.

மேலும் பயனர்கள் மென்பொருளைப் பயன்படுத்தும்போது சேவை விதிமுறைகளுக்கு ஒப்புக்கொள்கிறார்கள் எனவும் குறிப்பிட்டது.

இந்த வழக்கு இணைய விதிமீறலாக அமையவில்லை எனவும் அந்நிறுவனம் நீதிமன்றத்தில் வாதிட்டது.

இருப்பினும் ஏ.ஐ செயலி போதுமான எச்சரிக்கைகளை வழங்கவில்லை என்றும், மேலும் செயற்கை நுண்ணறிவு பதில்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் மூலங்களில் போதுமான சோதனைகள் இல்லை என்றும் வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com