

தாய்லாந்தின் புக்கெட்டில் வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
தாய்லாந்தின் தெற்கில் உள்ள புக்கெட் என்ற சுற்றுலாத் தீவில் செயல்பட்டு வாகன வாடகை நிறுவனம் இயங்கி வந்த வணிக கட்டிடத்தில் இன்று பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
இந்தக் கட்டிடம், பூக்கெட்டின் மேற்குக் கடற்கரையில் உள்ள பிரபலமான படோங் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது.
தாய்லாந்து அதிகாரிகளின் கூற்றுப்படி, உள்ளூர் நேரப்படி அதிகாலை சுமார் 3:17 மணியளவில் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
அருகிலுள்ள பல கட்டிடங்களுக்கு தீ வேகமாகப் பரவத் தொடங்கியது.
தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர் என்றும் 16 பேர் காயமடைந்தனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
காயமடைந்தவர்களில் 15 பேர் தாய்லாந்து நாட்டினர் மற்றும் ஒருவர் மியான்மர் நாட்டவர் ஆவார்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சுற்றுலாப் பயணிகள் யாரும் இல்லை என்று காவல்துறை தெரிவித்தது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
4 மாதங்கள் முன்னர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.