பாஜா கலிபோர்னியாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.9ஆக பதிவு

இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த சேதங்களும் பதிவாகவில்லை.
File Pic: Earthquake
Published on: 

மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா மாநிலத்தின் வடக்கு பகுதியில் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், தெற்கு கலிஃபோர்னியா மற்றும் தென்மேற்கு அரிசோனாவின் சில பகுதிகளிலும் இந்த நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பசிபிக் நேரப்படி காலை 10:27 மணிக்கு, மெக்ஸிகாலி என்ற எல்லை நகரத்தில் இருந்து சுமார் 22 மைல் தென்கிழக்கில், பாஜா கலிபோர்னியா, கலிபோர்னியா மற்றும் அரிசோனா ஆகிய மாநிலங்கள் சந்திக்கும் பகுதிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, டெல்டா குடியிருப்பு பகுதிக்கு வடக்கே, சுமார் 10 மைல் ஆழத்தில் அமைந்திருந்தது. நிலநடுக்கம் காரணமாக எந்த சேதங்களும் பதிவாகவில்லை என பாஜா கலிபோர்னியா ஆளுநர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார் .

முந்தைய அதிர்வுகள்:

செவ்வாய் கிழமை காலை ஏற்பட்ட நிலநடுக்கம் உள்ள அதே பிராந்தியத்தில், திங்கள் கிழமையன்று 2.8 முதல் 3.3 ரிக்டர் அளவிலான குறைந்தது மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கம் ஏற்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பல பின் அதிர்வுகளும் பதிவு செய்யப்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இம்பீரியல் கவுன்டி மற்றும் பாஜா கலிபோர்னியாவின் அருகில் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள, புவியியல் பிளவுகள் நிறைந்த பகுதியான இம்பீரியல் பிளவு மண்டலத்திற்கு அருகே இந்த நிலநடுக்கங்கள் நிகழ்ந்தன. இப்பகுதியில் இதற்கு முன்னர் ரிக்டரில் 6 மற்றும் 7-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

X