VIDEO: ஈராக்கில் ISIS குறித்து செய்தி சேகரிக்க சென்ற அமெரிக்க பத்திரிகையாளர் கடத்தல் - யார் இந்த ஷெல்லி கிட்டில்சன்?

சுயாதீன பத்திரிகையாளரான ஷெல்லி கிட்டில்சன் உலகின் நெருக்கடி நிறைந்த பிரதேசங்களில் குறிப்பாக ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வந்தவர்.
VIDEO: ஈராக்கில் ISIS குறித்து செய்தி சேகரிக்க சென்ற அமெரிக்க பத்திரிகையாளர் கடத்தல் -  யார் இந்த ஷெல்லி கிட்டில்சன்?
Published on

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் குறித்து செய்தி சேகரித்து வந்த அமெரிக்க பெண் பத்திரிகையாளர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க பத்திரிகையாளரான ஷெல்லி கிட்டில்சன் கடந்த செய்வ்வாய்கிழமை மாலை, ஈரான் தலைநகர் பாக்தாத்தில் அல் சாடவுன் தெருவில் அமைந்துள்ள பாக்தாத் ஓட்டல் அருகே அடையாளம் தெரியாத மர்ம மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

பாதுகாப்பு படையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மீட்கப்பட்டதாகவும் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இந்த கடத்தல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓட்டல் சாலையில் ஷெல்லி நின்றுகொண்டிருந்தபோது வாகனத்தில் வந்த கும்பல் ஒன்றை அவரை கடத்திச் செல்வது அதில் பதிவாகி உள்ளது.

ஷெல்லி கிட்டில்சன்:

சுயாதீன பத்திரிகையாளரான ஷெல்லி கிட்டில்சன் உலகின் நெருக்கடி நிறைந்த பிரதேசங்களில் குறிப்பாக ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வந்தவர்.

தற்போது நடந்து வரும் ஈரான்-இஸ்ரேல், அமெரிக்கா போரினால் ஈராக்கில் நிலவும் சூழல் குறித்து செய்தி சேகரிக்க அவர் அங்கு சென்றுள்ளார்.

இவரது செய்தியறிக்கைகள் பிபிசி, பொலிடிக்கோ, நியூஸ் லைன்ஸ் மேகஸின் உள்ளிட்ட முன்னணி இதழ்களில் வெளியாகி உள்ளன.

குறிப்பாக ஐஎஸ்ஐஎஸ் மற்றும் ஈராக்கில் செயல்படும் ஈரான் ஆதரவு குழுக்கள் குறித்து அவர் பரவலாக செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com