சவுதியில் திருமணத்தை மீறிய உறவு: பெண்ணுக்கு 100 சவுக்கடி தண்டனை விதித்த நீதிமன்றம்

சவுதி அரேபியாவில் 40 வயதான எஸ்தர் வான்ஜா முத்தோனி என்பவர் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார்.
Saudi Court Orders 100 Lashes for Woman in Extramarital Affair
Published on: 
Summary

சவுதி அரேபியாவில் திருமணத்தை மீறிய உறவில் இருந்து, குழந்தை ஒன்றை பெற்றெடுத்த பெண் ஒருவருக்கு 100 சவுக்கடி தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் வசித்து வரும் பணக்கார குடும்பம் ஒன்றிற்கு வீட்டு வேலை செய்வதற்காக, கென்யா நாட்டில் இருந்து 40 வயதான எஸ்தர் வான்ஜா முத்தோனி என்பவர் பணிப்பெண்ணாக வந்துள்ளார்.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில், இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார்.

சவுதிக்கு தனியாக வந்த எஸ்தர், வீட்டு வேலை செய்து அதன்மூலம் வருமானம் ஈட்டி வந்துள்ளார்.

இதையடுத்து எகிப்து நாட்டை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவருடன், எஸ்தருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது எஸ்தர் கர்ப்பமாகி ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

சவுதியில் திருமணத்திற்கு வெளியே உறவில் ஈடுபடுவது சட்டவிரோதமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களை இந்த வகையான சட்டங்கள் அதிகமாக கட்டுப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மருத்துவமனையில் குழந்தையை பெற்றெடுத்த எஸ்தரை காவல்துறையினர் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். எஸ்தர் தனது மகனுடன் கென்யாவிற்கு செல்ல முயன்றபோது, காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில் எஸ்தர் முன்னதாக வேலை செய்து வந்த வீட்டில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் பெட்ரோல் நிலையத்தில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு வருடமாக கென்யாவிற்கு திரும்ப செல்லமுடியாமல் சவுதியில் வசித்து வந்த எஸ்தருக்கு, தற்போது 100 சவுக்கடி தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தண்டனை குறித்து எஸ்தர் கூறுகையில், தனக்கு மிகவும் பயமாக இருப்பதாகவும், இந்த சவுக்கடிகளை தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில் குழந்தையை பெற்ற தாய், தனது தாய் நாட்டிற்கு திரும்ப செல்வது தடுக்கப்பட்டு, சவுக்கடி தண்டனைகள் விதிக்கப்பட்ட சம்பவத்திற்கு ALQST அமைப்பின் இயக்குநர் மரியம் அல்தோசரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தண்டனை ஒரு வன்முறை செயல் என்றும், குழந்தையை பெற்றெடுத்த எஸ்தர் தனது தாய் நாட்டிற்கு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சவுதி பெண்களை மேம்படுத்தும் ஒரு நவீன நாடாக சவுதி மாறி வருகிறது என ஆட்சியாளர்கள் உலகிற்கு தெரிவிக்கின்றனர். ஆனால் நீதிமன்றம் ஒரு தாய்க்கு 100 சவுக்கடிகள் விதிப்பதை நாம் காண்கிறோம் என மரியம் கூறினார்.

X