

அமெரிக்காவின் இந்திய வம்சாவளி பெண் எம்.பியான பிரமிளா ஜெயபால் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
இந்திய அரசாங்கம் 13 கோடி மக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியிருப்பது குறித்து நான் மிகுந்த கவலை கொள்கிறேன்.
ஜனநாயகத்தில் வாக்குரிமையை குலைப்பதற்காக, அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் பின்பற்றும் அதே உத்தியையே இந்திய அரசாங்கமும் கையாள்வது போல தோன்றுகிறது.
எல்லா இடங்களிலும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மிக அவசியமான பணியாகும். அமெரிக்க மக்களைப் போலவே இந்திய மக்களுக்கும் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்களைப் பெறுவதற்கு உரிமை உண்டு.
இத்தகைய சூழலில், வன்முறையற்ற எதிர்ப்பு இயக்கங்கள் மிக முக்கியமானவை. இந்தியாவில் ஜனநாயகத்திற்கு எதிரான முயற்சிகளை எதிர்கொள்ளும் வகையில், வன்முறையற்ற போராட்டங்களில் ஈடுபட்டுள்ள இந்திய மக்களுடன் துணை நிற்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.