காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் - மருத்துவர் உட்பட 6 பேர் உயிரிழப்பு

போரினால் சுகாதார உள்கட்டமைப்பு முற்றிலுமாக சிதைக்கப்பட்ட காசாவில், தற்போது செயல்படும் சில மருத்துவ வசதிகளில் ஒன்றாக கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனை விளங்குகிறது.
நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்
Published on: 
Summary

தெற்கு காசாவில் நாசர் மருத்துவமனையை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

தெற்கு காசாவில் உள்ள நாசர் மருத்துவமனையை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் குறைந்தது 12 பேர் காயமடைந்ததாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவு குறிவைக்கப்பட்டது எனவும் உயிரிழந்த 6 பேரில் ஒரு மருத்துவரும் அடங்குவார் என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று (வியாழன்) அதிகாலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் "ஒரு மூத்த ஹமாஸ் பயங்கரவாதி" மற்றும் பிற போராளிகள் தாக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்களை வழங்கவில்லை.

நாசர் மருத்துவமனை

போரினால் சுகாதார உள்கட்டமைப்பு முற்றிலுமாக சிதைக்கப்பட்ட காசாவில், தற்போது செயல்படும் சில மருத்துவ வசதிகளில் ஒன்றாக கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனை விளங்குகிறது.

ஹமாஸும் அதன் கூட்டாளிகளும் ராணுவ நடவடிக்கைகளை மறைப்பதற்காக மருத்துவமனைகளை பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதல்களில் அப்பாவி மக்களே அதிகம் உயிரிழந்து வருகின்றனர்.

இஸ்ரேலியப் படைகள் இதற்கு முன்னர் 2025ல் நாசர் மருத்துவமனை வளாகத்தில் உள்ளூர் செய்தியாளர்கள் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்தியது. இதில் ​​ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.

X