

ப்ளைதுபாய் பயணிகள் விமானத்தில் பயணம் மேற்கொண்ட ஓமன் பயணி பயங்கரவாத சிந்தனைகளால் ஆட்கொள்ளப்பட்டு, விமானத்தை மோத செய்யும் நோக்கம் கொண்டிருந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி 180 பயணிகளுடம் சென்ற விமானத்தை, ஓமன் விமானி கடத்தி தரையில் மோதி வெடிக்க செய்ய திட்டமிட்டார். அப்போது பயணிகளை காப்பாற்ற முயன்ற இந்திய விமானிக்கு கத்திக் குத்து விழுந்தது.
இருந்தாலும் இந்திய விமானியான ஸ்மித மச்சார் மன உறுதியுடன் செயல்பட்டு சவுதி அரேபியாவில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
இதையடுத்து பயங்கரவாத செயலில் ஈடுபட்ட ஓமன் விமானியை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஓமன் விமானி தவறான மதபோதனைகளால் ஆட்கொள்ளப்பட்டிருந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெதன்யாகு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "காலம் செல்ல செல்ல, நிலைமை தெளிவாகிறது. தாக்குதல் நடத்தியவர் தவறான மதபோதனைகளால் ஈர்க்கப்பட்டுள்ளார்.
விமானத்தை தரையில் மோத செய்து, விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளையும் கொல்வதே அவரது நோக்கமாக இருந்தது.
அவர் எங்கிருந்து அனுப்பப்பட்டார் என்பது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்; அவரை அனுப்பியவர் மிகக் கடுமையான விலையை கொடுக்க நேரிடும்.
கேப்டனை தாக்கிய துணை விமானியான பயங்கரவாதி தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இதுவரை நமக்கு தெரிந்த வரையில், அவர் தவறான மதபோதனைகளால் ஈர்க்கப்பட்டு பயங்கரவாத கருத்தியல் திணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
ஓமன் துணை விமானி தற்கொலை எண்ணத்தில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவரை அதிகாரிகள் கைது செய்யும் போது, தரையில் படுத்துக்கொண்டு, என்னைக் கொல்லுங்கள், என்னைக் கொல்லுங்கள் என்று விமானப் பணியாளர்களைப் பார்த்து கத்துகிறார்.
எனவே, அவர் தற்கொலை எண்ணத்தில் இருந்ததும், விமானத்தை வீழ்த்தவிருந்ததும் தெளிவாகியுள்ளது." என்று நெதன்யாகு கூறினார்.
இந்த பயங்கரவாத சம்பவம் குறித்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஆலோசகர் அன்வர் கர்காஷ் கூறுகையில், விமானத்தின் அறையில் நடந்த தாக்குதலை ஒரு ஆபத்தான பயங்கரவாதச் செயல் என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், “ப்ளைதுபாயில் உள்ள இந்திய விமானி ஸ்மித் மச்சார், ஒரு அபாயகரமான பயங்கரவாதச் செயலையும் ஏற்படக்கூடிய பேரழிவையும் எதிர்கொண்டபோது, தைரியம் மற்றும் பொறுப்புணர்வின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தியதால், அவர் அனைத்து பாராட்டுகளுக்கும் தகுதியானவர்” என்று கூறினார்.