

இந்திய வம்சாவளியான நவநீதம் நவி பிள்ளைக்கு இன்று 2026ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளப் பதிவில்.,
“பொய்கள், வெறுப்புணர்வு மற்றும் இரத்தப் பழி சுமத்தும் அவதூறுகளுக்கு ஒரு விருது வழங்கப்படுவதாக இருந்தால், நவி பிள்ளை அதில் ஒரு போட்டியாளராக மட்டுமல்லாமல், அவர்தான் முன்னிலையில் இருப்பார்.
தொடர்ந்து அரசியல் உள்நோக்கத்துடன் இஸ்ரேலை கொடூரமான பிம்பமாகச் சித்தரிப்பதிலும், இனப்படுகொலை என்ற பொய் குற்றச்சாட்டுகளைப் பரப்புவதிலும் அவர் வகித்த பங்கு மிக முக்கியமானது.
நவி பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்குவது நீதிக்கான அங்கீகாரம் அல்ல; மாறாக, இஸ்ரேல் மீதான வெறுப்புணர்வையும், பாரபட்சத்தையும் சட்டப்பூர்வமாக்குவதற்காக, ஒரு விருதையே அருவருக்கத்தக்க ஆயுதமாகப் பயன்படுத்துவதாகும்.
21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பொய்க்கு நோபல் குழு இப்போது அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், ஜோசப் கோயபெல்ஸ் நிச்சயமாக நரகத்திலிருந்தே இதற்குத் தனது கைதட்டல்களைத் தெரிவித்துக்கொண்டிருப்பார்.” எனக் குறிப்பிட்டுள்ளது.
இனவெறிக்கு எதிராகப் போராடி தென்னாப்பிரிக்காவில் இருந்து ஐந்தாவது ஆளாக அமைதிக்கான நோபல் பரிசை பெறுகிறார் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை.
ஐநாவின் விசாரணை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட நவநீதம் பிள்ளை கடந்த ஆண்டு இஸ்ரேல் - காசா மோதல் தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்பித்திருந்தார். அதில் இஸ்ரேல் காசாவில் அப்பட்டமாக இனப்படுகொலை நடத்துவதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். ஆனால் இஸ்ரேல் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நவநீதம் பிள்ளை தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.