கலிபோர்னியா ஈரானின் ஒரு பகுதி.. ஹார்முஸை அமெரிக்க பகுதியாக அறிவித்த டிரம்புக்கு பதிலடி!

உலகிலேயே அதிக அளவிலான புலம்பெயர்ந்த ஈரானியர்கள் வாழும் இடமாக அமெரிக்காவின் கலிபோர்னியா திகழ்கிறது.
மொஜ்தபா காமேனி, டிரம்ப்
மொஜ்தபா காமேனி, டிரம்ப்
Published on

ஈரான் - அமெரிக்கா இடையிலான போரில் மத்திய கிழக்கில் இருந்து மற்ற நாடுகளுக்கு எண்ணெய், எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பயணிக்கும் கடல்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

ஹார்முஸ்

இதனிடையே ஹார்முஸ் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அதை அமெரிக்காவின் ஒரு பிராந்திய பகுதி என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் தனது சமூக வலைதளத்தில் வரைபடம் வெளியிட்டு அறிவித்தார்.

பின்னர், அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கும் இந்தப் படத்தை மறுபதிவு செய்திருந்தது.

ஈரான் பதிலடி

டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கவின் முக்கிய மாகாணங்களுள் ஒன்றான கலிபோர்னியா மாகாணத்தை, ஈரானின் ஒரு பிராந்திய பகுதி என்று சித்தரித்து ஈரான் வரைபடம் வெளியிட்டுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் இந்த வரைபடம் பதிவிடப்பட்டுள்ளது.

அதில் கலிபோர்னியா மாநிலத்தை நீல நிறத்தில் பளிச்சிடும் வகையில் குறிப்பிட்டு, அதை "இஸ்லாமிய குடியரசான ஈரானின் புதிய பிராந்திய பகுதி" என கூறிப்பட்டுள்ளது.

ஏன் கலிபோர்னியா?

உலகிலேயே அதிக அளவிலான புலம்பெயர்ந்த ஈரானியர்கள் வாழும் இடமாக அமெரிக்காவின் கலிபோர்னியா திகழ்கிறது.

முக்கியமாக லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியில் சுமார் 1,41,000 ஈரானிய வம்சாவளி அமெரிக்கர்கள் வசிக்கின்றனர்.

லாஸ் ஏஞ்சலஸின் வெஸ்ட்வுட் பகுதி "தெஹ்ரான்கலெஸ்" என்றும் அழைக்கப்படுகிறது. தெஹ்ரான், ஈரானின் தலைநகர் ஆகும்.

1979ஆம் ஆண்டில் ஈரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு, ஈரானில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்தப் பகுதி ஒரு முக்கிய மையமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com