

அதில் ஈரானுடனான போர் குறித்து பேசிய அவர்,
"ஈரான் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாகச் சரணடைய வேண்டும். அவர்கள் சரணடைவதற்கான வெள்ளைக் கொடியை உயர்த்த வேண்டும்.
இதில் எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. இதற்கென எந்தக் காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
எங்களது கடற்படை முற்றுகையால் ஈரான் தினமும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை இழந்து வருகிறது.
இந்த வாரத்தில் அவர்கள் மீது இன்னும் கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
ஈரானின் ஆட்சியாளர்கள் நல்ல ராஜதந்திரிகள், ஆனால் அவர்களின் பொருளாதாரம் தற்போது முற்றிலும் குலைந்துவிட்டது." என்று தெரிவித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு தற்காலிக புதிய போக்குவரத்து பாதையை உருவாக்க ஈரானுடன் ஓமன் ஒப்பந்தம் எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், "ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஒருவேளை ஓமன் குறுக்கே நின்றால், அவர்கள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்துவோம்." என்றார்.
முன்னதாக ஹார்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும், அதை அமெரிக்காவின் பகுதியாக அறிவிக்கப்போவதாகவும் டிரம்ப் கூறியதன் பின்னனியில் இவ்வாறு பேசியுள்ளார்.
Fox News பேட்டியில் தொடர்ந்து பேசிய அவர், ஈரான் அணுஆயுத வல்லரசாக மாறுவதைத் தடுப்பதே எங்களது முதன்மை இலக்கு. இதுவரை நாங்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மிகச் சிறியவை.
பைடன் ஆட்சியில் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளும் எங்களிடம் தயார் நிலையில் உள்ளன." என தெரிவித்தார்.
காசா - இஸ்ரேல் விவகாரம் குறித்து பேசிய அவர், "ஹமாஸ் அமைப்பினர் தங்களிடமுள்ள ஆயுதங்களைக் கைவிட்டு வருகிறார்கள்.
எனவே, காசா மீது இஸ்ரேல் இனி தொடர்ந்து தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியமில்லை" எனத் தெரிவித்தார்.