

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தது.
இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்கியது. சுமார் 4 மாதங்களுக்கு பிறகு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டு அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
ஆனால் இன்னும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் மீண்டும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கலாம் என்ற சூழல் நிலவுகிறது.
இதற்கிடையே சமீபத்தில் தற்காப்பு நடவடிக்கை என்று கூறி ஈரானின் கெஷ்ம் தீவு உள்ளிட்ட சில இடங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
இந்தநிலையில் பக்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் ரேடாரை தாக்கியதாக ஈரான் அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக ஈரான் புரட்சி கர காவல்படை கூறியதாவது:-
ஈரானின் சிரிக் நகரில் உள்ள தொலைத் தொடர்பு கோபுரம் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக, பக்ரைனில் உள்ள அமெரிக்காவின் முன்கூட்டிய எச்சரிக்கை ரேடாரை நாங்கள் குறிவைத்து தாக்கினோம்.
இது ஹார்முஸ் ஜலசந்தியில் தனது வான்வழி ஆத்திரமூட்டல்களையும் எண்ணெய் கடத்தலையும் நிறுத்துமாறு அமெரிக்காவுக்கு விடுக்கும் ஒரு கடுமையான எச்சரிக்கையாகும்.
இந்த அத்துமீறல்களையும் ஆக்கிரமிப்புச் செயல்களை மீண்டும் செய்தால் வரம்பின்றி பதிலடி கொடுக்க ஈரான் புரட்சிகர காவல் படையின் விண்வெளிப் படை முழுத் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்து உள்ளது.