ஜப்பானில் 5 முறை தொலைந்த ஐபோன் 16 புரோ... மீண்டும் கைக்கே வந்த விந்தை! இந்திய பெண் வியப்பு

இத்தகைய நேர்மையும் பாதுகாப்பும் ஜப்பானில் மட்டுமே சாத்தியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
iPhone 16 Pro lost
Published on
Summary

இந்த சம்பவம் தனிநபரின் நேர்மையை மட்டும் வெளிப்படுத்தவில்லை, அங்குள்ள தொலைந்த பொருட்களை மீட்கும் முறைமையின் சிறப்பையும் காட்டுகிறது.

ஜப்பானின் மிகச் சிறந்த நிர்வாக கட்டமைப்பு மற்றும் மக்களின் நேர்மையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்கு வசிக்கும் பிரகதி என்ற இந்தியப் பெண், தனது விலைமதிப்பற்ற ஐபோன் 16 புரோ போனை ஐந்தாவது முறையாக தவறவிட்டு, மீண்டும் அதை யாருடைய கரங்களும் படாத நிலையில் பத்திரமாக மீட்டுள்ளார்.

அண்மையில் இரவு நேரத்தில் பிரகதி தனது போனை தொலைத்துள்ளார். உடனே மற்றொரு சாதனத்தின் மூலம் 'Find My' செயலியை பயன்படுத்தி சோதித்தபோது, அது சுமார் 600 மீட்டர் தொலைவில் இருப்பதை காட்டியுள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் யாரேனும் அதை எடுத்துச் சென்றிருப்பார்கள் என்ற அச்சத்துடன் சம்பவ இடத்திற்கு சென்றவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவர் தவறவிட்ட அதே இடத்தில் அந்த போன் அப்படியே இருந்துள்ளது.

பிரகதிக்கு ஜப்பானில் போன் தொலைவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு காவல் நிலையம், காய்கறி சந்தை மற்றும் இருமுறை ஆடை மாற்றும் அறைகளில் தனது போனை தவறவிட்டபோதும், அவை ஒவ்வொன்றும் பாதுகாப்பாக அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், இத்தகைய நேர்மையும் பாதுகாப்பும் ஜப்பானில் மட்டுமே சாத்தியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொலைந்த பொருட்கள் மீட்பு அமைப்பு

இந்த சம்பவம் தனிநபரின் நேர்மையை மட்டும் வெளிப்படுத்தவில்லை, அங்குள்ள தொலைந்த பொருட்களை மீட்கும் முறைமையின் சிறப்பையும் காட்டுகிறது. டோக்கியோ பெருநகர காவல் துறையின் தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் மட்டும் 48 லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 1.44 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் போன்களில் 1.19 லட்சத்திற்கும் அதிகமான போன்கள் உரிய உரிமையாளர்களிடம் வெற்றிகரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com