ஈரான் அமைதி முன்னெடுப்பிற்கு புதிய நடுநிலையாளர் தேவை - இந்தியா தனது வாய்ப்பை வீணடிக்கக் கூடாது

ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்றுவது போன்ற அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
India’s Role in Iran Peace Talks
Published on

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா போன்ற பலம் வாய்ந்த நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.

இதையடுத்து ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்றுவது போன்ற அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளுக்கு உலக அளவில் ஒரு பாதுகாப்பு கவுன்சில் இருக்க வேண்டும் என்று ஈரான் விரும்புவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இஸ்ரேல், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுடன் ஒரு வலுவான உறவுகளை இந்தியா பேணி வருகிறது. இதன்மூலம் அனைத்து தரப்பு நாட்டினரையும் சுமூகமான பேச்சுவார்த்தைக்கு கொண்டு வரும் ஒரு நட்பு நாடாகவும் இந்தியா இருந்து வருகிறது.

ஹார்முஸ் பிரச்சனையில் இந்தியா முன்னின்று செயல்படுவதன்மூலம், பிராந்திய வர்த்தகத்தை நிலைப்படுத்துதல் மற்றும் நாடுகடந்த பயங்கரவாதத்தை எதிர்கொள்வது ஆகியவற்றின் மீது சர்வதேச கவனத்தை திரும்ப பெறமுடியும்.

இந்த அமைதி பேச்சுவார்த்தையை ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே வெற்றிகரமாக நடத்துவது, அதன் மீது உலகளாவிய நிர்வாகத்தில் இந்தியாவின் நிலையை உயர்மட்டத்தில் நிலை நிறுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com