சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கு: இந்திய வாலிபருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை

வடமேற்கு இங்கிலாந்தின் செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.
Bilal Kashi
Published on: 

இங்கிலாந்தில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த பிலால் காஷி (வயது 27) என்பவர் இணையத்தில் சிறார் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டார்.

அவர் மீதான வழக்கு விசாரணை வடமேற்கு இங்கிலாந்தின் செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதில், அவர் இணையதளத்தில் 10 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளை குறிவைத்து, தான் ஒரு சிறுவனாக நடித்து அவர்களை பாலியல் செயல்களில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தி, ஆபாசமான படங்களையும் வீடியோக்களையும் அனுப்பியுள்ளார்.

அவரது கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்தவர்களை, அந்த ஆபாசப் படங்களை மற்றவர்களுக்குப் பதிவேற்றுவதாக மிரட்டிப் பணம் பறித்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

X