2025-ம் ஆண்டில் 47,000 பெண்கள் - சிறுமிகள் குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளனர்: ஐநா அறிக்கை

இது சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 பெண்கள் (அல்லது ஒரு நாளைக்கு 129 பெண்கள்) கொல்லப்படுவதற்குச் சமமாகும்
 UN report
Published on: 

2025-ம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 47,000 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் வாழ்க்கைத் துணைவர் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினத்தை முன்னிட்டு, ஐநா பெண்கள் அமைப்பு (UN Women) மற்றும் ஐநாவின் போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகம் (UNODC) இணைந்து வெளியிட்ட 'ஃபெமிசைட் அறிக்கை 2026' (2026 Femicide Brief) இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது

2025-ம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 47,000 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் வாழ்க்கைத் துணைவர் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இது சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 பெண்கள் (அல்லது ஒரு நாளைக்கு 129 பெண்கள்) கொல்லப்படுவதற்குச் சமமாகும் என்று ஐநா அமைப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

இது குறித்து ஐநா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

பெண்களுக்கு வீடே ஆபத்தான இடம்

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட பெண் கொலைகள் குறித்த அறிக்கையில் , ஒரு பெண் அல்லது சிறுமிக்கு வீடே மிகவும் ஆபத்தான இடமாகத் தொடர்கிறது என்பதையும், இந்தப் போக்கு பல ஆண்டுகளாகப் பெரிய அளவில் மாறவில்லை என்பதையும் வெளிப்படுத்திருப்பதாக அறிக்கை சுட்டிகாட்டியுள்ளது

2025-ஆம் ஆண்டில் நிகழவிருக்கும் மொத்த 78,000 பெண் கொலைகளில் அறுபது சதவீதம், நெருங்கிய துணைவர் அல்லது நெருங்கிய உறவினரால் செய்யப்பட்டுள்ளனர்.இது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சராசரியாக ஐந்து பெண்கள், அல்லது ஒரு நாளைக்கு 129 பேர் என்ற விகிதமாகும்.

பிராந்திய வாரியான பாதிப்பு நிலவரம்

உலகின் எந்தப் பகுதியும் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பானதாக இல்லை என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. பிராந்திய வாரியாகக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் வெளியிட்டுள்ளது.

திகபட்ச விகிதத்தைக் கொண்ட கண்டமாக ஆப்பிரிக்கா திகழ்கிறது (ஒரு லட்சம் பெண் மக்கள்தொகைக்கு 2.9 பேர்). அதனைத் தொடர்ந்து அமெரிக்கா (1.4 பேர்), ஓசியானியா (1.1 பேர்), ஆசியா (0.6 பேர்) மற்றும் ஐரோப்பா (0.5 பேர்) ஆகிய கண்டங்கள் உள்ளன.

அச்சமூட்டும் மனப்பான்மையே காரணம்

நாம் மிக நீண்ட காலமாகவே கவலையளிக்ககூடிய புள்ளிவிவரத்துடன் தொடர்ந்து வருவதாக ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்ற அலுவலகத்தின் (UNODC) நிர்வாக இயக்குநர் மோனிகா ஜூமா கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது

அச்சமூட்டும் மனப்பான்மைகள், சமூக நெறிமுறைகள் மற்றும் நிறுவனப் பாதுகாப்புகளின் தோல்வி ஆகியவை, ஒரு மனைவி, மகள், தாய் அல்லது சகோதரியைக் கொல்வது 'சகித்துக்கொள்ளக்கூடிய' ஒன்றாக மாறும் ஒரு சூழலை உருவாக்குகின்றன.

இந்த யதார்த்தத்தை மாற்றுவதற்கு, சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. சமூக நடத்தை மற்றும் தீங்கு விளைவிக்கும் மனப்பான்மைகளை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட தடுப்பு உத்திகளைச் செயல்படுத்துவதற்கான நமது முயற்சிகளை நாம் இரட்டிப்பாக்க வேண்டும்.

அத்துடன், குடும்ப வன்முறையில் ஈடுபடுவோரைக் கையாள்வதற்கும், பெண்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் மனித உரிமைகளையும் கண்ணியத்தையும் உறுதி செய்வதற்கும் சிறப்புத் திட்டங்கள் மற்றும் தலையீடுகளில் நாம் தீவிரமான உத்திகளை முதலீடு செய்ய வேண்டும். என்று தெரிவித்தார்

புகார் அளிப்பத்தில் தயக்கம்

உலகளவில் கிட்டத்தட்ட மூன்று பெண்களில் ஒருவர் உடல் ரீதியான அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொள்கிறார். ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் 7 சதவீதம் பேர் மட்டுமே காவல்துறையில் புகார் அளிக்கின்றனர். பாதுகாப்பு குறைபாடு, நிதிச் சிக்கல்கள் மற்றும் நீதி அமைப்புகள் மீதான நம்பிக்கையின்மை ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

உயிர்களை பாதுகாப்பது சட்டத்தின் அடிப்படையான நோக்கம்

பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு உரிமைகளை நிலைநாட்டுவதற்கான ஒவ்வொரு தவறவிடப்பட்ட வாய்ப்பும், நீதியின் தோல்வியாகும்; மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளின் உயிர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் மிக அடிப்படையான கடமையின் தோல்வியும் ஆகும்.

எந்தவொரு எச்சரிக்கை அறிகுறியும் புறக்கணிக்கப்படாமல் இருப்பதையும், பாதிக்கப்பட்ட எவரும் பாதுகாப்பின்றி விடப்படாமல் இருப்பதையும், எந்தவொரு குற்றவாளியும் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்காமல் இருப்பதையும் உறுதிசெய்ய நாம் அவசரமாகச் செயல்பட வேண்டும், என்று ஐ.நா. பெண்கள் அமைப்பின் நிர்வாக இயக்குநர் சீமா பஹூஸ் தெரிவித்தார்.

குறையாத வன்முறை

2024-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 50,000 ஆக மதிப்பிடப்பட்டிருந்தது. 2025-ல் இது 47,000 ஆகக் குறைந்திருப்பது, நாடுகளிடமிருந்து தரவுகள் சேகரிக்கும் முறையில் ஏற்பட்ட மாற்றங்களால் மட்டுமே தவிர, குற்றங்கள் உண்மையில் குறைந்ததால் அல்ல என்று ஐநா தெளிவுபடுத்தியுள்ளது.

ஆரம்பகால தட்டுப்பு மற்றும் தண்டனை

குற்றவாளிகளுக்குத் தண்டனை. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைச் சாதாரணமாகக் கருதும் சமூக மனப்பான்மையை மாற்றவும், குற்றவாளிகள் தப்பிக்காமல் கடுமையான தண்டனை வழங்கவும் அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநா பெண்கள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

ஆரம்பகட்ட தடுப்பு. பெரும்பாலான கொலைகள் திடீரென நடப்பவை அல்ல; நீண்ட காலமாகத் தொடரும் குடும்ப வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களின் உச்சகட்டமாகவே நிகழ்கின்றன. ஆரம்பத்திலேயே இதனைத் தடுக்க அரசுகள் முன்வர வேண்டும் என்று ஐநா அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

X