ஒலிம்பிக் போட்டி: பயிற்சி ஓட்டத்தில் தடுப்பு மீது மோதி தீப்பிடித்து எரிந்த ரோபாவால் பரபரப்பு

சீன மனித உருவ ரோபோ ஓட்டப்பந்தய போட்டியில் சுவரில் மோதி ரோபோ கீழே விழுந்து தீப்பிடித்தது.
Humanoid Robot Race Accident
Published on

சீனாவில் 2026-ஆம் ஆண்டிற்கான மனித உருவ ரோபோ விளையாட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில், ஓட்டப் பந்தய போட்டிக்காக பயிற்சி பெறுவதற்காக மனித உருவ ரோபோ ஒன்று சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி கீழே விழுந்தது.

இந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

சீனாவில் இந்த ஆண்டிற்கான மனித உருவ ரோபோ, நாளை (22.08.2026) தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிகளில், ஆயிரக்கணக்கான ரோபோக்கள் பல்வேறு ஒலிம்பிக் பாணி நிகழ்வுகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

மனித உருவ ரோபோ போட்டி

சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற உள்ள போட்டியில், 16 நாடுகளை சேர்ந்த 666 அணிகள் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மனித உருவ ரோபோ போட்டியில் 2,000-க்கும் மேற்பட்ட மனித உருவ ரோபோக்கள், தடகள போட்டிகள் மற்றும் நிஜ உலக பணிச் சூழல்களை உள்ளடக்கிய 51 நிகழ்வுகளில் போட்டியிட உள்ளது.

இந்த நிலையில் சீனாவில் நடைபெறவுள்ள போட்டிக்கு முன்னோடியாக மனித உருவ ரோபோ ஓட்டப்பந்தய போட்டி இன்று நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் கலந்துகொண்ட ரோபோ ஒன்று, அதிவேகமாக சென்று தனது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் சுவரில் மோதியது.

தீப்பிடித்த ரோபோ

அப்போது அந்த மனித உருவ ரோபோவில் இயந்திரக் கோளாறும், சிறிய தீப்பொறிகளும் ஏற்பட்டன.

இதன்மூலம் மனித உருவ ரோபோக்களுக்கு அசைவுகளை கட்டுப்படுத்துவதில் உள்ள சிரமம் வெளிப்படையாக தெரிவதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com