100 மீட்டர் தூரத்தை 8.86 வினாடிகளில் கடந்த அல்ட்ரா ரோபோ - தனது முந்தைய சாதனை முறியடிப்பு

தியாங்காங் அல்ட்ரா ரோபோ 100 மீட்டர் ஓட்டத்தை 8.86 வினாடிகளில் கடந்து உசைன் போல்ட் சாதனையை முறியடித்தது.
Tiangong Ultra
Published on

சீனாவில் நடைபெற்ற இரண்டாவது உலக மனித உருவ ரோபோ போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 8.86 வினாடிகளில் கடந்து தனது முந்தைய சாதனையான 9.39 என்ற வினாடியை தியாஙாங் அல்ட்ரா ரோபோ முறியடித்துள்ளது.

மனித உருவ ரோபோ போட்டி

சீனாவின் பெய்ஜிங் நகரில் கடந்த 22-ஆம் தேதி இரண்டாவது உலக மனித உருவ ரோபோ விளையட்டு போட்டி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.

இந்த போட்டி உலகளவில் ரோபோட்டிக்ஸ் துறையில் சீனாவின் விரைவான முன்னேற்றங்களை வெளிக்காட்டும் ஒரு களமாக நடைபெற்றது.

புதிய சாதனை

இந்த ரோபோ முன்னதாக 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவை சேர்ந்த தடகள வீரரான உசைன் போல்ட்டின் 9.58 என்ற சாதனையை 9.39 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தது.

இந்த நிலையில் சீனாவின் பீய்ஜிங் நகரில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் பெய்ஜிங் மனித உருவ ரோபோட்டிக்ஸ் மையத்தால் உருவாக்கப்பட்ட தியாங்காங் அல்ட்ரா ரோபோ கலந்து கொண்டது.

இந்த போட்டியில் தனது முந்தைய சாதனையான 9.39 வினாடியை முறியடித்து, 8.86 வினாடிகளில் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

அமெரிக்க பேராசிரியர் பாராட்டு

இந்த சாதனை குறித்து லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இயந்திர மற்றும் விண்வெளி பொறியியல் பேராசிரியர் டென்னிஸ் ஹாங் கூறுகையில், “இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்.

ரோபோ மனிதனை விட வேகமாக ஓடியதால் மட்டுமல்ல, இரண்டு கால்களில் நடக்கும் ஒரு ரோபோவை இந்த வேகத்தில் ஓட வைப்பதற்கு என்னவெல்லாம் தேவைப்படுகிறது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வேகம் அதிகரிக்கும் போது சமநிலை, கட்டுப்பாடு, தாக்கங்கள், செயல்திறன் மற்றும் இயந்திர உறுதித்தன்மை ஆகிய அனைத்தும் மிகவும் சவாலனதாக மாறுகின்றன” என்று அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com