சவுதி வர்த்தக மைய கோபுரம் மீது ஹவுதி தாக்குதல்: 2 இந்தியர்கள் உடபட 11 பேர் காயம் - இந்தியா கண்டனம்

சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என்றும் கத்தார் கூறியுள்ளது.
சவுதி வர்த்தக மைய கோபுரம் மீது ஹவுதி தாக்குதல்: 2 இந்தியர்கள் உடபட 11 பேர் காயம் - இந்தியா கண்டனம்
Published on: 
Summary

சவுதி தலைநகர் ரியாத் வர்த்தக மைய கோபுரம் மீது ஹவுதி தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 11 பேர் காயமடைந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்ற

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள வர்த்தக மைய கோபுரத்தை ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று டிரோன் மூலம் தாக்கினர்.

தாக்குதலைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் மொத்தம் 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இரண்டு இந்தியக் குடிமக்கள், இரண்டு சவுதி குடிமக்கள், மூன்று நேபாளக் குடிமக்கள் மற்றும் நான்கு எகிப்தியக் குடிமக்கள் அடங்குவர்.

ஏற்கனவே இந்த கோபுரம் கடந்த வாரமும் குறிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

கண்டனம்

லெபனானும் கத்தாரும் இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளன.

லெபனான் பிரதமர் நவாப் சலாம், எக்ஸ் தளத்தில் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளார். இது ஒரு பயங்கரவாதச் செயல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு வெட்கக்கேடான ஆக்கிரமிப்புச் செயல் என்றும், சவூதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் சர்வதேசச் சட்டத்தை மீறிய செயல் என்றும் கத்தார் கூறியுள்ளது.

இதனிடையே இந்தியா வெளியுறவு அமைச்சகம் இந்த தாக்குதலை கண்டித்துள்ளதுடன் ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம், காயமடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது என தெரிவித்துள்ளது.

ஏமனில் அரச படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

இதில் ஏமன் அரச படைகளுக்கு சவுதி அரேபியா உதவி வருவதால் அந்நாட்டின் மீது ஹவுதிக்கள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் இருக்கும் சனா நகர் மீது சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் 28 பேர் வரை கொல்லப்பட்டதாக ஹவுதி தரப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X