இன்று மதியம் முதல் நாளை மாலை வரை.. புத்தாண்டை முதலிலும் கடைசியிலும் வரவேற்கும் இடங்களை தெரியுமா?

பூமி 24 நேர மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவை ஒவ்வொன்றும் ஒரு நிலையான நேரத்தைக் கொண்டுள்ளன. இந்தியாவில் இன்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறப்பதற்கு முன்பாக 41 நாடுளில் ஏற்கனேவே புத்தாண்டு பிறந்திருக்கும்.
இன்று மதியம் முதல் நாளை மாலை வரை.. புத்தாண்டை முதலிலும் கடைசியிலும் வரவேற்கும் இடங்களை தெரியுமா?
Published on

366 நாட்களை நிறைவு செய்து இன்றுடன் 2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. 2025 புத்தாண்டை வரவேறக உலகம் தயாராகி வருகிறது.

பலருக்கு, புத்தாண்டின் தொடக்கமானது ஒரு வருடத்திற்கு விடைகொடுத்து மற்றொரு வருடத்தை வரவேற்கும் உணர்ச்சிகரமான தருணம்.

தீர்க்கரேகையின் அடிப்படையில், பூமி 24 நேர மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவை ஒவ்வொன்றும் ஒரு நிலையான நேரத்தைக் கொண்டுள்ளன.

எனவே இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது என்றாலும் உலகம் முழுவதும் வெவ்வேறு நேரம் பின்பற்றப்படுவதன் காரணமாக சில நாடுகள் முதலாவதாகவும், சில நாடுகள் தாமதமாகவும் புத்தாண்டை வரவேற்கிறேன.

இந்திய நேரப்படி (IST) இந்தியா இயங்குகிறது. இது ஒருங்கிணைந்த உலகளாவிய நேரத்தை விட 5 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்னதாக உள்ளது (UTC +5:30).

பூமியில் புத்தாண்டைக் கொண்டாடும் முதல் இடம் கிரிட்டிமாட்டி [Kiritimati] தீவு. இது கிறிஸ்மஸ் தீவு என்றும் அழைக்கப்படுகிறது, இது பசிபிக் பெருங்கடல் பவளப்பாறை மற்றும் கிரிபாட்டி குடியரசின் ஒரு பகுதியாகும்.

இதனுடன் பசிபிக்கில் இருக்கும் டோங்கோ, சமோயா உள்ளிட்ட தீவுகளிலும் முதலாவதாகப் புத்தாண்டு பிறக்கிறது. அதாவது இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணியளவில் இங்கு புத்தாண்டு பிறந்துவிடுகிறது.

 மக்கள் வசிக்காத அமெரிக்க அருகே சமோவா மற்றும் நியு தீவுகள் புத்தாண்டை வரவேற்கும் கடைசி இடமாக உள்ளன. இங்கு இந்திய நேரப்படி நாளை [ஜனவரி 1] மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது.

மேலும் இந்தியாவில் இன்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறப்பதற்கு முன்பாக 41 நாடுளில் ஏற்கனேவே புத்தாண்டு பிறந்திருக்கும். அந்த நாடுகளில் சில கிரிபாட்டி, சமோவா, டோங்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, ரஷ்யாவின் சில பகுதிகள், மியான்மர், ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகியவை அடங்கும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com