மேற்கு கரை விஷயத்தில் உரசல்.. கிழக்கு ஜெருசலேம் பிரிட்டன் தூதர செயல்பாடுகள் நிறுத்தம் - தூதர்கள் வெளியேற்றம்

தூதர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன், இஸ்ரேல்
Published on: 
Summary

கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரிட்டன் தூதரகத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

நேற்று இஸ்ரேல் வெளியிட்ட அறிக்கையில், கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரிட்டன் தூதரகத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதாகவும் , துணைத் தூதர் உட்பட 20 பிரிட்டிஷ் தூதர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்தக் கட்டிடம் 'யுகே மிஷன், ஜெருசலேம்' என்ற பெயரில் தொடர்ந்து செயல்படும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.

உரசல்

பிரிட்டனும் பிற மேற்கத்திய நாடுகளும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றங்களுடனான வர்த்தகத்திற்குத் தடைகளை விதித்தன.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் செப்டம்பர் மாதம் பிரிட்டன் தூதரகத்தை மூட உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. இந்நிலையில் தூதரகத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

விளக்கம்

பிரிட்டிஷ் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே, பிரிட்டனின் தூதரகப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிடியான் சார் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com