சீனாவின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி காலமானார்!

1998 முதல் 2003 வரை சீனாவின் பிரதமராகப் பணியாற்றினார்.
சீனாவின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி காலமானார்!
Published on

சீனாவின் அசாதாரண பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜூ உடல்நலக்குறைவால் இன்று காலை 11 மணியளவில் உயிரிழந்தார்.

ஜூவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, தேசிய மக்கள் பேரவையின் நிலைக் குழு, அரச மன்றம் மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் குழு ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்.,

“ஜூ ஒரு சிறந்த கட்சி உறுப்பினர், காலத்தால் சோதிக்கப்பட்ட மற்றும் விசுவாசமான கம்யூனிஸ்ட் போராளி. ஒரு தலைசிறந்த பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர், ராஜதந்திரி, கட்சி மற்றும் நாட்டின் சிறந்த தலைவர் ஆவார்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூ 1998-ல் சீனாவின் பிரதமரானார். இவரது மிகவும் பிரபலமான சீர்திருத்தங்களில், லாபமற்ற அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதற்கான ஒரு பரந்த திட்டம், நகர்ப்புற வீட்டுவசதியைத் தனியார்மயமாக்குதல் மற்றும் சொந்த வீட்டு உரிமையை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com