

இஸ்ரேலில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி தலைமையிலான கூட்டணி 53 இடங்களையும், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட்டின் யாஷிர் கட்சி தலைமையிலான கூட்டணி 48 இடங்களையும் கைப்பற்றின. அரபு கட்சிகள் 19 இடங்களை வென்றன.
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காடி ஐசன்கோட்டுக்கு ஆதரவு இருப்பதால் அவரை கூட்டணி அரசை அமைக்க அதிபர் அழைப்புவிடுத்து உள்ளார். இதற்கிடையே மீண்டும் ஆட்சி அமைக்க நெதன்யாகு மறைமுகமாக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் பிரதமர் பதவியில் இருந்து நெதன்யாகுவை நீக்குவதற்காக 5 இஸ்ரேல் எதிர்க்கட்சி தலைவர்கள் கைகோர்த்து உள்ளனர். காடி ஐசென்கோட், நப்தாலி பென்னட், யாயிர் லாபிட், யாயிர் கோலன், அவிக்டோர் லிபர்மேன் ஆகிய 5 தலைவர்கள் பாராளுமன்றத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஒரு தேசிய அவசரகால அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்தனர். மேலும், நெதன்யாகுவை பதவியில் இருந்து நீக்கி அவருக்குப் பதிலாக வேறொருவரை நியமிப்பதே தங்களின் முதன்மையான முன்னுரிமை என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த கூட்டத்திற்கு முன்பு நெதன்யாகுவுடன் பியகாத் கட்சி தலைவர் நப்தாலி பென்னட் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.