

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தைச் சேர்ந்த சைரினா ஆன் குவாஸ்ட் என்ற பெண் கடந்த ஆகஸ்ட் 30-ந்தேதி மான்டிசெல்லோ பகுதியில் உள்ள கடை ஒன்றில் திருடியதாக கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் கடை ஒன்றில் திருடிய அந்த பெண்ணின் புகைப்படம் காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி பேசுப்பொருளாகி வருகிறது .காரணம் அமெரிக்காவின் பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ஜெனிபர் லோபஸ் போலவே அந்த பெண்ணும் ஒத்திருக்கிறார்.
அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தைச் சேர்ந்த சைரினா ஆன் குவாஸ்ட் என்பவர் கடந்த ஆகஸ்ட் 30-ந்தேதி மான்டிசெல்லோ பகுதியில் உள்ள கடை ஒன்றில் திருடியதாக கைது செய்யப்பட்டார்.
கடையில் சுமார் 580 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பவர் டூல் பேட்டரிகளின் இரண்டு பேக்குகளை அவர் திருடியதாக போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மீது திருட்டு தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மறுநாள் அவர் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், இந்த சம்பவத்தை விட அவர் கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் தற்போது சமூக ஊடகங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.
அந்த புகைப்படத்தில் சைரினா ஆன் குவாஸ்ட், ஜெனிபர் லோபஸை மிகவும் ஒத்திருப்பதாக சமூக வலைதள பயனர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இருவரின் புகைப்படங்களையும் ஒப்பிட்டு பல்வேறு மீம்ஸ்களும், நகைச்சுவையான பதிவுகளும் பகிரப்பட்டு வருகின்றன.
முதலில் இது ஜெனிபர் லோபஸ் என்று நினைத்துவிட்டேன் என்றும் ஆச்சரியத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.