மண்ணோடு மண்ணான F15.. ஏமனில் சவுதி போர் விமானத்தை ஏவுகணையால் துளைத்த ஹவுதிக்கள்- வீடியோ

ஹவுதிக்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் களமிறங்கியுள்ளது.
F15
F15
Published on
Summary

ஏமன் வான்பரப்பில் சவுதி ராணுவத்தின் எப்15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரச படைகளுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. ஹவுதிக்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் களமிறங்கியுள்ளது.

எப்15

இந்நிலையில் ஏமனின் மாரிப் மாகாணத்தில் சவுதியின் எப்15 போர் விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஹவுதிக்கள் தெரிவித்துள்ளனர்.

சுட்டு வீழ்த்தப்பட்ட சவதி விமானம் மாரிப் பகுதியில் ராணுவ நடவ்டிக்கையில் ஈடுபட்டிருந்ததாக ஹவுதிக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஹவுதி ராணுவ பிரிவு செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மாரிப் மாகாணத்தின் வான்வெளியில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த சவுதி F15 ரக போர் விமானம் ஒன்றை, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வான்விட்டு வான் ஏவுகணையைப் பயன்படுத்தி வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தின." என தெரிவித்துள்ளார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாலைவனத்தில் விழுந்த கிடந்த போர் விமானம் முற்றிலும் உருக்குலைந்துள்ளது காணப்படுகிறது.

மேலும் சவுதியின் டிஓர்ன் ஒன்றையும் மாரிபில் சுட்டு வீழ்த்தியதாக ஹவுதிக்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்

ஏற்கனவே சவுதி விமானங்கள் ஏமனில் தங்கள் ஆளுகைக்கு உட்பட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களை தாக்கியதாக ஹவுதிக்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

ஒரே வாரத்தில் சவுதி 450 வானவழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஏமன் குற்றம்சாட்டியுள்ளது.

தைஸ், லாஜ், அல் ஜாவப், மாரிப், சதா, அல் பைடா மாகாணங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர் என்றும் பலர் காயம்பட்டனர் என்றும் ஹவுதி தரப்பு தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com