

சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
ஜப்பானின் ஷிமா நகருக்கு தென்கிழக்கே 58 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6-ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 352 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சேதங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை.