நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 579 ஆக உயர்வு... 1,924 மாயம்!

திபெத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 558 பேரை காணவில்லை என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது.
நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை  579 ஆக உயர்வு... 1,924 மாயம்!
Published on

நேபாளத்தில் புதன்கிழமையன்று (ஆக.26) திடீரென ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கிய குறைந்தது 1,924 பேரைக் காணவில்லை என நேபாள பேரிடர் நிவாரண மையம் தெரிவித்துள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 579ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இவர்களில் 517 வெளிநாட்டினர் என்றும் தெரிவித்துள்ளது. இதில் இந்தியர்கள் மட்டும் 178 பேர் காணவில்லை என நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திபெத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 558 பேரை காணவில்லை என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் 260 பேர் வெளிநாட்டினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்டு டெல்லி திரும்பிய நிலையில், மற்றவர்களை மீட்கும் பணியில் மாநில, மத்தி மற்றும் நேபாள அரசுகள் ஈடுபட்டுள்ளன.

புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளம் மட்டுமின்றி, அந்த வெள்ளத்தால் உருவான தற்காலிக ஏரி உடைந்து மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருந்ததால், மீட்புப் பணிகள் சில மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com