ரூ.818 கோடி ஊழல் செய்த அரசியல்வாதி.. மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த சீன நீதிமன்றம்

சீனாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக ஷி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டார்.
Chinese Politician Sentenced to Death for ₹818 Crore Corruption Case
Published on: 
Summary

சீனாவில் அரசியல்வாதி ஒருவர் சுமார் 800 கோடி ரூபாய் ஊழல் செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு மரண தண்டனை விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக ஷி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து ராணுவ தலைவராக பதவியேற்ற இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு சீனாவின் அதிபராக பொறுப்பேற்று ஏற்றுக்கொண்டார்.

சீனாவில் அனைத்து அரசாங்க துறைகளிலும் லஞ்சம் மற்றும் ஊழல்கள் அதிகரித்து வந்ததையடுத்து, ‘ஆபரேசன் ஸ்கை நெட்’ என்ற ஊழல் தடுப்பு நடவடிக்கையை சீன அதிபர் தொடங்கினார்.

இந்த ஊழல் தடுப்பு நடவடிக்கையானது, ஊழல் மற்றும் பொருளாதார குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய குற்றவாளிகளை கண்டறிவதற்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும் நாடு கடந்த சொத்துக்களை மீட்பதற்கும், சட்ட விரோத அரசு சொத்துக்களை மீட்பதற்கும் 2015 ஆம் ஆண்டு ‘ஸ்கை நெட்’ ஊழல் தடுப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.

இதையடுத்து சீன அரசியல்வாதியான லான் தியான்லி என்பவர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கடந்த 2008 மற்றும் 2025 ஆகிய காலகட்டத்தில் சுமார் 818 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத்தொடர்ந்து சீன அரசியல்வாதி லான் மீது, சீனாவின் ஹுனான் மாகாண நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், லான் தனது குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்த நீதிமன்றம், அவர் அரசியலில் நிற்பதற்கு நிரந்தர தடை விதிப்பதாக தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து அரசியல்வாதி லானின், இரண்டு கால சிறைவாசத்தை கண்காணிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த குறிப்பிட்ட இரண்டு ஆண்டு சிறைவாசத்தின் போது, லானின் நன்னடத்தையை கண்காணிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த இரண்டு ஆண்டுகால சிறைவாசத்தின் போது, லானின் நன்னடத்தை நல்லதாக இருக்கும் பட்சத்தில், அவரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆயுள் தண்டனையானது, பரோல் மூலம் வெளியே வர முடியாத ஆயுள் தண்டனையாக இருக்கும் எனவும் ஹுனான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

X