மகனை கல்லூரியில் சேர்ப்பதற்காக 3,500 கி.மீ. பயணம் சென்ற குடும்பம்

சீனாவில் மகனை மருத்துவ கல்லூரியில் சேர்க்க 3,500 கி.மீ கார் பயணம் செய்த குடும்பத்தினர்.
Chinese family drives 3,500 km
Published on

சீனாவில் உள்ள குடும்பம் ஒன்று, மேல்படிப்பை தொடர இருக்கும் மகனை, தங்களது கிராமத்தில் இருந்து 3,500 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திற்கு அழைத்து சென்று, அந்த பயணத்திற்காக குடும்பத்தினர் சுமார் 3 லட்சம் செலவழித்துள்ளது குடும்பத்தின் மீதான ஒற்றுமை காட்டுவதாக அமைந்துள்ளது.

சீனாவின் ஸாவோஷூ வாங் என்ற நகரத்தில் ஜெங் என்பவரின் குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது. ஜெங்கின் மகன் உள்ளூரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்த பின்பு, ஷின் ஜியாங் என்ற நகரத்தில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரியில் மருத்துவ சேர்க்கை பெற்றான்.

இதையடுத்து தனது மகனை மருத்துவ கல்லூரியில் சேர்ப்பதற்காக, அவனது தந்தை ஏழு இருக்கைகள் கொண்ட ஒரு பெரிய வாகனத்தை எடுத்துச் செல்ல தீர்மானித்தார்.

இந்த கல்லூரியானது, ஜெங்கின் கிராமத்தில் இருந்து சுமார் 3,500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த பயணத்தில் தனது மகனுடன் சேர்ந்து அவனது பெற்றோர்கள், மூத்த சகோதரி, சகோதரியின் கணவர் மற்றும் 80 வயது தாத்தா ஆகிய ஆறு குடும்ப உறுப்பினர்கள் காரில் செல்வதற்கு திட்டமிட்டனர்.

கடந்த ஆகஸ்ட் 20 அன்று தங்களது கிராமத்தில் இருந்து புறப்பட்ட அந்த குடும்பத்தினர், நான்கு நாட்கள் பயணம் செய்து மருத்துவ கல்லூரியை அடைந்தனர்.

இந்த பயணத்தை மறக்க முடியாத பயணமாக ஆக்குவதற்காக, மாணவனின் தந்தை காரின் பின்பக்க கண்ணாடியில், “மகனை கல்லூரிக்கு அனுப்புகிறோம்; ஸாவோஷூ வாங் கிராமத்தில் இருந்து ஷின் ஜியாங் நகரத்திற்கு” என்று சீன எழுத்துக்களில் பெயிண்ட் அடித்திருந்தார்.

காரின் பின்பக்க கண்ணாடியில் எழுதியிருந்த இந்த வாசகம், வழி நெடுகிலும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த பயணத்தில் கெங் மற்றும் அவரின் மனைவி இருவரும் வாகனத்தை மாற்றி மாற்றி ஓட்டினர்.

இந்த பயணத்தை மேலும் சுவாரஸ்மயாக ஆக்குவதற்காக, கெங் தனது குடும்பத்தினருடன் அந்த வழியாக இருந்த சுற்றுலா தளங்களுக்கும் அழைத்து சென்றுள்ளார்.

தனது மருத்துவ சேர்க்கைகான பயணம் குறித்து மாணவரின் தந்தையான கெங் கூறுகையில், பயணத்தின் மொத்த பயணச் செலவு சுமார் 3 லட்சமாக இருக்கும் என தெரிவித்தார்.

இந்த பயணத்தில் பெட்ரோல் செலவுக்காக 85,000 ரூபாய் செலவழித்ததாகவும், சாலை கட்டணமாக 44,000 ரூபாய் செலுத்தியதாகவும், உணவு செலவுக்காக ஆயிரக்கணக்கில் செலவழித்ததாகவும் அவர் கூறினார்.

மருத்துவ கல்லூரிக்கு தனது கிராமத்தில் இருந்து ரெயில் மூலம், 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக இருந்ததாகவும், ஆனால் ரெயில் பயணத்தை விட கார் பயணத்தை தான் விரும்பியதாகவும் அவர் கூறினார்.

பணம் சம்பாதிப்பதை விட, தனது மகனை கல்லூரியில் சேர்ப்பதும், அவனை அனுப்புவதும் தான் தனக்கு முக்கியமானதாக இருந்ததாக அவர் கூறினார். இதற்காக தனது கடையை இரண்டு வாரத்திற்கு விடுமுறை விட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த பயணம் குறித்து மாணவர் கூறும்போது, என்னை கல்லூரியில் சேர்ப்பதற்காக எனது குடும்பத்தினர், எடுத்த முடிவு தன்னை மிகவும் நெகிழச் செயவ்தாக உள்ளதாக கூறினார்.

மேலும் என் மீது அவர்கள் வைத்துள்ள ஆழ்ந்த அன்பு சந்தேகத்திற்கு இடமின்றி தெரிவதாகவும் மாணவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com