திருமணம் ஆகவில்லை என்றால் ரூ. 28 ஆயிரம் திரும்ப வழங்கப்படும்: உறுதி அளிக்கும் dating app..!

AI உதவியைக் கொண்டு துணையை எப்படியும் கண்டுபிடித்துவிட முடியும் என அந்த செயலி சொல்கிறது.
Dating APP
Dating APP
Published on: 
Summary

திருமணம் ஆகவில்லை என்றால் பதிவு கட்டணமான 28 ஆயிரம் ரூபாய் திரும்ப வழங்கப்படும் என்று சீனாவின் புதிய டேட்டிங் ஆப் உறுதி அளித்துள்ளது.

திருமணம் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு வித்தியாசமான சலுகையை அறிவித்து சீனாவைச் சேர்ந்த புதிய டேட்டிங் செயலி (Dating App) அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தச் செயலியைப் பயன்படுத்தியும் மூன்று ஆண்டுகளுக்குள் திருமணம் நடைபெறவில்லை என்றால், செலுத்திய உறுப்பினர் கட்டணத்தை முழுமையாகத் திருப்பித் தருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

Liangpei AI App

Liangpei AI என்று அழைக்கப்படும் இந்தச் செயலி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய உதவுகிறது.

இதன் ஆண்டு உறுப்பினர் கட்டணம் 2,000 சீன யுவான். இந்திய மதிப்பில் சுமார் ரூ.28,000 ஆகும். மூன்று ஆண்டுகளுக்குள் திருமணம் நடைபெறாவிட்டால் முழுப் பணத்தையும் திருப்பித் தருவதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது.

எப்படி செயல்படுகிறது?

முதலில் பயனர்கள் AI உடன் சுமார் 20 நிமிடங்கள் உரையாட வேண்டும். குடும்பப் பின்னணி, கல்வி, வேலை, பழக்கவழக்கங்கள் மற்றும் திருமண எதிர்பார்ப்புகள் ஆய்வு செய்யப்படும். அதன்பிறகு பொருத்தமான வாழ்க்கைத் துணையை AI பரிந்துரைக்கும். ஒரே நேரத்தில் ஒருவருடன் மட்டுமே பேச முடியும். அடுத்த நபரைச் சந்திக்க விரும்பினால் தற்போதைய தொடர்பை முடிக்க வேண்டும்.

மேலும், திருமணமாகாதவர்கள் மட்டுமே பதிவு செய்யும் வகையில் அடையாளச் சரிபார்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது.

35,000 பயனர்களை ஈர்த்த செயலி!

இந்த செயலியின் நிறுவனர் செங் சின்சுன் (Zeng Xinxun) ஆவார். இவர் ஏஐ தேடுதல் தொழில்நுட்பமான Moonshot AI (Kimi) தலைவராக இருந்தவர்.

இந்த செயலி 35,000-க்கும் அதிகமான பதிவுகளைப் பெற்றுள்ளதாகவும், சுமார் 9 சதவீதம் பேர் கட்டணம் செலுத்தும் உறுப்பினர்களாக மாறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dating செயலியை அறிமுகம் செய்துள்ள சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூரில் அரசு ஊழியர்களின் குழந்தை பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ள நிலையில், துணைகளை தேடும் வகையில் சிங்கப்பூர் அரசு Dating செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் தங்களுக்கு பொருத்தமமான துணையை தேடிக்கண்டுபிடித்துக் கொள்ள முடியும் என அரசு நினைக்கிறது.

X