சீனாவின் ஆளில்லா நிலவுப் பயணத் திட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு

லாங் மார்ச்-5 என்ற ராக்கெட் ஏவுவதற்கு தயாரான நிலையில் இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
China moon mission
சீனா நிலவு திட்டம்
Published on
Summary

2030-க்குள் நிலாவில் விண்வெளி வீரர்களை தரையிறக்கும் வகையில், Chang’e-7 நிலவு திடடத்தை சீனா மேற்கொண்டு வருகிறது.

விண்வெளி சாதனையில் அமெரிக்காவுக்கு போட்டியாக திகழ சீனா முயற்சி மேற்கொண்டு வருகிறது. விண்வெளி மையம் அமைத்தல், செவ்வாய், நிலவுக்கு விண்கலத்தை செலுத்துவது போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது.

Chang’e-7 நிலவு திட்டம்

நிலாவின் தென்துருவத்தில் உள்ள நிரந்தர பள்ளத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆளில்லா விண்கலம் அனுப்பி சோதனை நடத்த சீனா அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த திட்டத்திற்கு Chang’e-7 நிலவு திட்டம் என சீனா பெயரிட்டுள்ளது.

Chang’e-7 விண்கலம் Long March-5 என்ற ராக்கெட் மூலம் செலுத்தப்பட இருந்தது. சில நாட்களுக்கு முன்னதாக ஏவுதள தளம் மற்றும் தளவாடங்கள் எல்லாம் சிறப்பான நிலையில் உள்ளதாக சீனா அரசு தெரிவித்திருந்தது.

இநத் நிலையில் ஏவுதலுக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்று சீனா, நிலவு பயணத்தை ஒத்தி வைத்து்ளளது. இந்த Chang’e-7 விண்கலம் தெற்கு சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஏவப்படத் திட்டமிடப்பட்டிருந்தது.

Chang’e-7 விண்கலமும் அதைச் சுமந்து செல்லும் Long March-5 ராக்கெட்டும் ஏற்கனவே ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தன. ஏவுதலுக்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், சீன அதிகாரிகள் திடீரென இந்த முடிவை அறிவித்தனர்.

சீனாவின் மனித விண்வெளிப் பயண நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விரிவான மதிப்பீட்டுக்குப் பிறகு இந்தப் பணி ஏவுதலுக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றும், திட்டமிடப்பட்ட 2026 காலக்கட்டத்தில் இதை ஏவ முடியாது என்றும் தெரிவித்தது. ஆனால், எந்த குறிப்பிட்ட தொழில்நுட்ப அல்லது வானிலை காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

Chang’e-7-ன் முக்கிய நோக்கம் நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதும், நிரந்தரமாக நிழலில் இருக்கும் பள்ளங்களில் நீர் பனி இருப்பதற்கான ஆதாரங்களைத் தேடுவதும் ஆகும். நிலவின் வளங்களைப் பற்றிய முக்கியமான தகவல்களை சேகரிப்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாக இருந்தது.

இந்த தாமதம் சீனாவின் நிலவு ஆய்வுத் திட்டத்திற்கு பின்னடைவாக இருந்தாலும், 2030-க்கு முன் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்க வேண்டும் என்ற அதன் நீண்டகால இலக்கில் Chang’e-7 முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com