விண்வெளியில் இருந்தபடி மூன்றாவது பெண் குழந்தையின் பிறப்பை கொண்டாடிய கனடா வீரர்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும்போது தனது குழந்தையின் பிறப்பைத் தவறவிட்ட வரலாற்றில் நான்காவது விண்வெளி வீரர் குட்ரிக் ஆவார்.
new Born baby
Published on: 
Summary

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பணியில் உள்ள கனடா நாட்டு விண்வெளி வீரர் ஜோசுவா குட்ரிக், பூமியில் பிறந்த தனது மூன்றாவது பெண் குழந்தையை விண்வெளியில் இருந்தபடியே வரவேற்று மகிழ்ந்துள்ளார்.

ஆறு மாத விண்வெளிப் பயணத்தில் ஈடுபட்டுள்ள ஜோசுவா குட்ரிக்கின் மனைவி ஹீதருக்கு, கடந்த நவம்பர் 24 செவ்வாய்க்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக கனடா விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிதாகப் பிறந்த குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இந்நிறுவனம் வாழ்த்துத் தெரிவித்த நிலையில், குட்ரிக் இதய ஈமோஜியுடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

பாசப் பிணைப்பு

எங்களுக்கு இடையே நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் இருந்தாலும், எங்கள் வாழ்வில் வந்திருக்கும் இந்தப் புதிய நட்சத்திரத்தை வரவேற்கும்போது மிக நெருக்கமாக உணர்கிறோம் என்று குட்ரிக் தம்பதி வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே பீட்டர் மற்றும் அன்னா ஆகிய ஐந்து மற்றும் ஏழு வயது குழந்தைகள் உள்ளனர்.

பூமி திரும்பும் காலம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும்போது தனது குழந்தையின் பிறப்பைத் தவறவிட்ட வரலாற்றில் நான்காவது விண்வெளி வீரர் குட்ரிக் ஆவார். கடந்த அக்டோபரில் தொடங்கிய இந்தப் பயணம், சிறு வயதிலிருந்தே அவர் கனவு கண்ட முதல் விண்வெளிப் பயணமாகும். இவர் வரும் 2027 மார்ச் மாதம் பூமி திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

X