இடிந்து விழுந்த துபாய் புர்ஜ் கலிஃபா கட்டிடம்.. இணையத்தில் வெளியான அதிர்ச்சி காட்சிகள்

பாப்-அல்-மண்டேப் ஜலசந்தியானது, கச்சா எண்ணெய் மற்றும் வணிக கப்பல்கள் செல்லும் முக்கிய வர்த்தக போக்குவரத்து தளமாக உள்ளது.
Burj Khalifa Collapse Shocker
Published on: 
Summary

துபாயில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா, வெடிகுண்டு தாக்குதலில் இடிந்து விழுவது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏமன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாப்-அல்-ஜலசந்தியை கைப்பற்றும் நோக்கில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பாப்-அல்-மண்டேப் ஜலசந்தியானது, கச்சா எண்ணெய் மற்றும் வணிக கப்பல்கள் செல்லும் முக்கிய வர்த்தக போக்குவரத்து தளமாக உள்ளது.

இதற்கிடையில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், பாப்-அல்-மண்டேப் ஜலசந்தியை கைப்பற்றும் நோக்கில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஏமன் அரசாங்கத்திற்கு ஆதரவாக சவுதி அரேபியா ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், சவுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய புனித தளங்களான மெக்கா மற்றும் மதினா ஆகியவற்றின் மீது ஹவுதி தாக்குதல் நடத்தியது.

மேலும் சவுதியின் முக்கிய நகரங்கள் மீதும், விமான நிலையங்கள் மீதும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எவுகணை தாக்குதல்களை நடத்தினர்.

இந்த சம்பவத்தையடுத்து, ஈரான் மீது கடந்த பிப்ரவரி தொடங்கி அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் சூழலில், அமெரிக்காவின் ராணுவ தளங்கள் அமைந்துள்ள துபாய் மீது ஈரான் ராணுவம் கடந்த பிப்ரவரி 28 அன்று தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் துபாயில் அமைந்துள்ள பாம் ஜூமைரா, புர்ஜ் அல் அரப் ஹோட்டலுக்கு முன்பு குண்டுகள் வீசப்பட்டன.

இதைத்தொடர்ந்து துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தின் மீதும் ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தியதாக துபாய் தெரிவித்தது.

இந்த நிலையில் தற்போது துபாயில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான 2722 அடி உயர கட்டிடமான புர்ஜ் கலிபா இடிந்து விழுவது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தற்போது இணையத்தில் பரப்பப்படும் காட்சிகள் ஏ.ஐ மூலமாக உருவாக்கப்பட்டவை என தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

X