பாகிஸ்தானில் காவல் நிலையத்தை கைப்பற்றி, ராணுவ கேப்டனை கொலை செய்த பலுசிஸ்தான் போராளிகள்

பாகிஸ்தானில் கடந்த 1948 ஆம் ஆண்டில் இருந்து பலுசிஸ்தான் போராளிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
Balochistan Rebels Attack
Published on: 
Summary

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் போராளிகள் இன்று நடத்திய தாக்குதலில், ராணுவ புலனாய்வு கேப்டன் ஒருவரை கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒரு காவல் நிலையம் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 1948 ஆம் ஆண்டில் இருந்து அந்நாட்டு ராணுவத்துடன் பலுசிஸ்தான் போராளிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பாகிஸ்தானில் உள்ள பல பகுதிகளில் பலுசிஸ்தான் விடுதலை முன்னணி ‘ஆபரேஷன் அல்மாஸ்’ என்ற தாக்குதலை நடத்தியது.

பலுசிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு சேவை குழுவை சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த தாக்குதல்கள் முழு தீவிரத்துடனும், வெற்றியுடனும் தொடர்வதாக பலுசிஸ்தான் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

போராளிகள் குழு

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் போராளிகள் குழு நடத்திய தாக்குதல் குறித்து பலுசிஸ்தான் செய்தி தொடர்பாளர் மேஜர் குவாஹ்ராம் பலோச் கூறுகையில்,

தங்களது போராளிகள் ஃபிராண்டியர் வொர்க்ஸ் ஆர்கனைசேஷனின் பிரதான முகமையை கைப்பற்றி, அங்கு தங்களது கொடியை ஏற்றியுளதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள முழானி காவல் நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, ராணுவ புலனாய்வு கேப்டன் ஒருவரை கொலை செய்து, அங்கிருந்த ஆயுதங்களையும் ராணுவ உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பலுசிஸ்தான் போராளிகள் குழு தெரிவித்துள்ளது.

இதையடுத்து குப்து பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதல் சம்பவத்தில், பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரின் வாகன அணிவகுப்பை தங்கள் போராளிகள் குழு தாக்கியதாகவும், இந்த தாக்குதலில் ஒரு ராணுவ வாகனம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் பலுசிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தானின் பல பகுதிகளில் பலுசிஸ்தான் போராளிகள் குழு நடத்திய தாக்குதல் சம்பவத்தின் காணொளி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த காணொளி காட்சியில், “பாகிஸ்தான் இப்போது தோற்கடிக்கப்பட்டுவிட்டது, அவர்களால் நம்முடன் சண்டையிட முடியாது” என்று ஒருவர் கூறுவதும், ஒரு பலுசிஸ்தான் பெண் போராளி தனது கையில் துப்பாக்கி வைத்து சுடுவதும் பதிவாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com