பத்திரிகையாளர், ஐரோப்பிய தூதர்கள் மீது தாக்குதல் - 10 பேர் கைது

அமெரிக்காவின் தொடர் அழுத்தத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் நடவடிக்கை
srael arrests at least 10 suspected of West Bank attacks on journalist
Published on: 

கடந்த வார இறுதியில்ன் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பத்திரிகையாளர் மற்றும் ஐரோப்பிய தூதர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேரை இஸ்ரேல் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேறிகளால் பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் மூத்த புகைப்பட பத்திரிகையாளரான ஹெய்டி லெவின், கடந்த வெள்ளிக்கிழமை பாலஸ்தீன மக்களுடன் இணைந்து ஆலிவ் அறுவடை பணிகளைப் பார்வையிடச் சென்றபோது தாக்கப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

அவரைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் தாய்பே பகுதியில் ஆலிவ் அறுவடை பணிகளைப் பார்வையிடச் சென்ற ஐரோப்பிய தூதர்கள் குழுவினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் போலந்து நாடுகளைச் சேர்ந்த தூதரகப் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா அழுத்தம்

இந்தத் தாக்குதல் சம்பவங்களுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவும் இஸ்ரேலை வலியுறுத்தியது.

இதையடுத்து, இஸ்ரேல் போலீசார் ராணுவத்துடன் இணைந்து 'ஆலிவ் லீஃப்' என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து சம்பவங்களுடன் தொடர்புடைய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், சில வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க தூதர் மைக் ஹக்கபீ, இந்தக் கைதுகளை வரவேற்றுள்ளார். பத்திரிகையாளர் ஹெய்டி லெவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதற்கான நடவடிக்கை இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com