நீங்கள் ஒரு introvert-ஆ? உங்களுக்கு சண்டைபோட தெரியவில்லையா? வாய் வாடகைக்கு - மிகக்குறைந்த கட்டணம்!

விஜய்யின் கத்திப் பட பாணியில் அமைந்திருக்கும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
உங்களுக்கு சண்டைபோட தெரியவில்லையா? வாய் வாடகைக்கு - மிகக்குறைந்த கட்டணம்!
Published on: 

‘வாய் இல்லை என்றால், உன்னை நாய் தூக்கிட்டு போய்டும்’ என கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. அதிகம் பேசுவர்களை இவ்வாறு கிண்டலாக சொல்வர்.

அதற்கு, வாய் இல்லையென்றால் உங்களிடம் எல்லாம் பிழைக்க முடியுமா? என அவர்களும் பதிலளிப்பர். இது பார்ப்பதற்கு சிரிப்பாகவும், வேடிக்கையாகவும் இருக்கும்.

இந்நிலையில் இந்த சொலவடைக்கு பொருந்தும் வகையில், அந்த வாயை வைத்தே தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார் சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர்.

“代吵架”

தென் சீனாவின் குவாங்சோவைச் சேர்ந்த நபர் ஒருவர், யாருக்காவது பிறருடன் பிரச்னை ஏற்பட்டால், அவர்களுக்காக வாதாடி அப்பிரச்சனையை சுமூகமாக முடித்து வைக்கிறார். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையையும் வசூல் செய்கிறார்.

“代吵架” (உங்கள் சார்பாக வாதிடுகிறேன்) என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியபடி, அவர் நடந்து செல்லும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அலுவலக சண்டைகள், மாணவர்களுக்கு வகுப்புகளில் சரியாக பாடம் எடுக்காதது, மருத்துவமனைகளில் சரியான சிகிச்சை இல்லை என எந்தப் பிரச்சனை என்றாலும் பேசி தீர்த்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய நீதியை பெற்றுத் தருகிறார்.

காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை இந்த வேலையை செய்கிறார். தனது வழக்கில் வெற்றி பெரும் வரை தான் பேசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைக்கலப்பு இல்லை

தனது கட்சிக்காரர்களுக்காக சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்து பேசினாலும், எப்போதும் தனது வாக்குவாதம் கைக்கலப்பில் முடிந்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

உங்கள் வாக்குவாதம் எப்போதாவது சண்டையில் முடிந்துள்ளதா? என ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்.,

“முதலாவதாக, நாங்கள் சண்டையிடுவதில்லை; இரண்டாவதாக, நாங்கள் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை. ஏனென்றால், நீங்கள் சண்டையில் ஈடுபட்டு, யாராவது காவல்துறையை அழைத்தால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்.

மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், அதற்கு செலவு செய்யவேண்டும்” என்று கூறினார்.

கட்டணம்

இந்த வேலைக்காக சீன மதிப்பில் 188 யுவான் சம்பளமாக பெறுகிறார். இந்திய மதிப்பில், சுமாராக ரூ.2,474 இருக்கும். நீங்கள் யாராவது இன்ட்ரோவெர்ட்டாக இருந்தால், கத்தி படப் பாணியில் யாரையாவது அடிக்க ஆள் வேண்டும் என்றால் இவரை தொடர்பு கொள்ளலாம். ஆனால் அவர் அடிக்கமாட்டார், வெறும் வாய் வார்த்தை மட்டுமே.

X

Maalai Malar
www.maalaimalar.com