

இஸ்ரேலிய நாடாளுமன்றமான சென்ட்டில் அரபு தலைவர் துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜாயிண்ட் லிஸ்ட் கூட்டணியின் தலைவருமான அகமது திபி துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வலதுசாரி தலைவர் அவிக்டோர் லிபர்மேன் நாடாளுமன்றத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு குழுக்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அகமது திபி, அரபு கட்சிகளின் ஜாயிண்ட் லிஸ்ட் கூட்டணியின் அங்கமான தா அல் கட்சியின் தலைவர் ஆவார்.
இஸ்ரேலில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் நேதன்யாகுவின் லிகுத் கட்சியின் கூட்டணி பெரும்பான்மையை பெறத் தவறியது. எதிராணியான காடி ஐசென்கோட் உடைய கூட்டணியும் பெரும்பான்மை பெறவில்லை.
இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீன வழி வந்த அராபியர்களை பிரதிநிதுத்துவப்படுத்தும் அரபு கட்சிகளை உள்ளடக்கிய ஜாயிண்ட் லிஸ்ட் கூட்டணி மற்றும் யுனைடட் அராப் லிஸ்ட் கூட்டணி 19 இடங்களை வென்று கிங் மேக்கராக உருவெடுத்தது. காடி ஐசென்கோட்க்கு அவர்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதில் ஜாயிண்ட் லிஸ்ட் கூட்டணி மட்டும் 11 இடங்களில் வென்றது. அந்த கூட்டணியில் இடம்பெற்ற தா அல் கட்சியின் தலைவர் அகமது திபி, அந்த கூட்டணிக்கும் தலைமை தாங்கினார்.
இவர் இஸ்ரேல் நாடாளுமன்றமான செனட்டின் உறுப்பினர் ஆவார். இந்த சூழலில் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து, புதிதாகப் பதவியேற்ற 9 துணை சபாநாயகர்களில் ஒருவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வலதுசாரி கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்ற ஏற்பாட்டுக் குழுவின் வாக்கெடுப்பில் இவரது நியமனம் உறுதி செய்யப்பட்டது.
1999 முதல் இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அகமது திபி, இஸ்ரேலிய அரசியலில் முன்னணி பாலஸ்தீனிய வம்சாவளி தலைவர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
மேலும், அவர் ஏற்கனவே 2006 முதல் 2022 வரை நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக பணியாற்றினார்.
தேர்தலில் முறைகேடு செய்ய முயன்றதற்காக நேதன்யாகு மற்றும் அவரது உதவியாளர்கள் மீது குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என அகமது திபி அழைப்பு விடுத்துள்ளார்.
"நேதன்யாகு உட்பட யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல" என்று திபி தெரிவித்தார்.
கடந்த நவம்பர் அன்று ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக், காடி ஐசென்ட்கோட்டை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதி ஹெர்சாக், ஐசன்கோட் அரசு அமைத்து பெரும்பான்மையை நிரூபிக்க 28 நாட்கள் அவகாசம் அளித்து, டிசம்பர் 6, 2026ஐ காலக்கெடுவாக நிர்ணயித்தார்.
அதிகபட்சம் டிசம்பர் 20 வரை அவர் காலக்கெடுவை நீட்டிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. இதனிடையே நேதன்யாகு இடைக்காலப் பிரதமராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.