Apple நிறுவனத்தின் CEO பதவியில் இருந்து விலகுகிறார் டிம் குக்: 15 ஆண்டுகால வரலாற்றுப் பயணம் நிறைவு!

1998-இல் ஸ்டீவ் ஜோப்ஸால் சர்வதேச செயல்பாட்டுப் பிரிவின் மூத்த துணைத் தலைவராக ஆப்பிள் நிறுவனத்தில் டிம் குக் இணைக்கப்பட்டார்.
Tim Cook-John Turness
Published on
Summary

டிம் குக் தலைமையில் 350 பில்லியன் டாலராக இருந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5 டிரில்லியன் டாலரை எட்டியது.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியில் இருந்து டிம் குக் விலகுகிறார். கடந்த 15 ஆண்டுகளாக நிறுவனத்தை வழிநடத்திய இவர், செப்டம்பர் 1 முதல் நிர்வாகத் தலைவராக செயல்படுவார். இவருக்குப் பதிலாக, ஆப்பிள் நிறுவனத்தின் ஹார்டுவேர் இன்ஜினியரிங் பிரிவின் மூத்த துணைத் தலைவராகப் பணியாற்றிய ஜான் டர்னஸ் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார்.

செயல்பாட்டுத் திறனில் புதிய மைல்கல்

1998-இல் ஸ்டீவ் ஜோப்ஸால் சர்வதேச செயல்பாட்டுப் பிரிவின் மூத்த துணைத் தலைவராக ஆப்பிள் நிறுவனத்தில் டிம் குக் இணைக்கப்பட்டார். விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் உற்பத்தி முறையில் அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்கள், பொருட்கள் தேக்கமடைவதைக் குறைத்து நிறுவனத்தின் செயல்பாட்டுச் செலவை கணிசமாகக் குறைத்தன.

5 டிரில்லியன் டாலர் வரை வளர்ச்சி

2011-இல் ஸ்டீவ் ஜோப்ஸின் மறைவுக்குப் பின் தலைமைப் பொறுப்பை ஏற்ற டிம் குக், ஆப்பிள் நிறுவனத்தை ஒரு பெரிய நிதிப் பேரரசாக மாற்றினார். அவரது தலைமையில் 350 பில்லியன் டாலராக இருந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5 டிரில்லியன் டாலரை எட்டியது. மேலும், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ், விஷன் புரோ போன்ற புதிய சாதனங்களையும், ஆப்பிள் மியூசிக், ஐகிளவுட் உள்ளிட்ட சேவைகள் மூலம் வருவாயைப் பெருக்கும் உத்திகளையும் அறிமுகப்படுத்தினார்.

செப்டம்பர் 1 முதல் புதிய சிஇஓ-வாகப் பொறுப்பேற்கும் ஜான் டர்னஸ், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பப் போட்டி மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாக மாற்றத்தில் இது மிக முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com