மேற்கு ஜெர்மனியில் அமெரிக்க போர் விமானம் விபத்து

விமானத்தை இயக்கிய விமானி விமானத்தில் இருந்து வெளியேறி நூலிழையில் உயிர்தப்பினார்.
Flight accident
Published on

மேற்கு ஜெர்மனியின் ஸ்பாங்டஹ்லெம் நகரில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்திற்குச் சொந்தமான எப்-16 ரக போர் விமானம் ஒன்று, வழக்கமான பயிற்சிப் பறப்பை முடித்து திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த விமானம் விபத்துக்குள்ளானது.

விமானத்தை இயக்கிய விமானி விமானத்தில் இருந்து வெளியேறி நூலிழையில் உயிர்தப்பினார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த இடத்துக்கு மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பயிற்சியில் ஈடுபட்டிருந்த 4 போர் விமானங்களைக் கொண்ட குழுவில் எப்-16 விமானமும் இடம்பெற்றிருந்தது.

விபத்தைத் தொடர்ந்து, மற்ற 3 விமானங்களும் ராம்ஸ்டீன் விமானப்படைத் தளத்திற்குத் திருப்பிவிடப்பட்டுப் பாதுகாப்பாகத் தரையிறங்கின.

X

Maalai Malar
www.maalaimalar.com