‘முக்கிய பங்காற்றிய நட்புறவு’: இத்தாலியின் நீண்டநாள் பிரதமர் - மெலோனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

1,413 நாட்களைத் தாண்டி தொடர்ச்சியாகப் பிரதமராக பதவியாற்றி வருகிறார்.
‘முக்கிய பங்காற்றிய நட்புறவு’: இத்தாலியின் நீண்டநாள் பிரதமர் - மெலோனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Published on

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலியின் வரலாற்றில் மிக நீண்ட காலம் தொடர்ச்சியாகப் பணியாற்றிய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜார்ஜியா மெலோனி. அவரின் இந்த சாதனைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;

மக்களின் நம்பிக்கை

“போருக்குப் பிந்தைய வரலாற்றில், இத்தாலியின் மிக நீண்ட காலம், தொடர்ச்சியாகப் பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்ற எனது நண்பர் பிரதமர் மெலோனிக்கு வாழ்த்துகள்.

இந்த மைல்கல், அவரது தலைமையின் மீது இத்தாலிய மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும், உறுதியையும் பிரதிபலிக்கிறது.

இருதரப்பு உறவு

இந்தியா-இத்தாலி சிறப்பு உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதிலும் அவரது நட்பு முக்கியப் பங்காற்றியுள்ளது.

நமது நாட்டு மக்களுக்கு ஒரு வளமான எதிர்காலத்தைக் கட்டமைக்க, நமது நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடர ஆவலுடன் உள்ளேன். வரும் ஆண்டுகளில் அவர் தொடர்ந்து வெற்றிபெற எனது நல்வாழ்த்துக்கள்.” எனக் கூறப்பட்டுள்ளது.

முதல் பெண் பிரதமர்

ஜார்ஜியா மெலோனி இத்தாலியின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்று இந்த இமாலயச் சாதனையை எட்டியுள்ளார். 2022 அக்டோபர் 22 அன்று இத்தாலியின் முதல் பெண் பிரதமரான மெலோனி அந்நாட்டின் வரலாற்றில் இன்றோடு (செப்.4) 1,413 நாட்களைத் தாண்டி தொடர்ச்சியாகப் பிரதமராக பதவியாற்றி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com