

இந்தியாவின் பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் 4 ஐரோப்பிய நாடுகள் உட்பட மொத்தம் 5 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின் இறுதிக்கட்டமாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் அழைப்பை ஏற்று நேற்று ரோம் சென்றடைந்தார். ரோம் சென்றடைந்த பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் மெலோனியை சந்தித்தார்.
அப்போது, இந்தியாவிலிருந்து கொண்டு சென்ற ‘மெலோடி’ சாக்லேட் பாக்கெட்டை மெலோனியிடம் வழங்கி ஆச்சரியப்படுத்தினார்.
இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவை இத்தாலி பிரதமர் மெலோனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "பிரதமர் மோடி எங்களுக்கு மிகவும் நல்ல டாபி கொண்டு வந்துள்ளார் - மெலோடி!" எனக் கூறி இருவரும் சிரிக்கின்றனர்.
ஏற்கனவே இருநாட்டு தலைவர்களின் பெயரையும் இணைத்து 'Melodi' (Meloni + Modi) என நெட்டிசன்கள் இணையத்தில் கூறிவரும் நிலையில், தற்போது அதற்குப் பொருத்தமாக மோடி சாக்லேட் பரிசளித்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.